» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருச்செந்தூர் கோவில் பெயரில் பணம் வசூல்: சைபர் கிரைம் பிரிவு போலீசாரிடம் புகார்!

செவ்வாய் 7, அக்டோபர் 2025 8:42:14 AM (IST)



திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் பெயரில் பணம் வசூல் செய்யப்படுவதாக சைபர் கிரைம் பிரிவு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் உஷாராக இருக்க கோவில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, கோவில் நிர்வாகம் தினமும் அன்னதானம் வழங்கி வருகிறது. இந்நிலையில், திருச்செந்தூர் கோவிலில் நடைபெற உள்ள கந்த சஷ்டி விழாவிற்காக தனிநபர்கள் சிலர், கோவில் பெயரை பயன்படுத்தி அன்னதானத்திற்காக பணம் வசூல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக, கோவில் அலுவலக கண்காணிப்பாளர் அற்புதமணி, கோவில் காவல் நிலையம் மற்றும் சைபர் கிரைம் பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அதில் "சத்குரு சிவா என்ற பெயரில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக வலைதள கணக்குகளில் பக்தர்களிடம் முறைகேடாக நன்கொடை வசூல் செய்யப்பட்டு வருவது தெரிந்தது. பக்தர்களை ஏமாற்றும் நோக்கத்துடன் செயல்படும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory