» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஆதவ் அர்ஜூனா மீது நடவடிக்கை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
வெள்ளி 3, அக்டோபர் 2025 5:48:08 PM (IST)
ஆதவ் அர்ஜுனா மீது விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த சம்பவத்திற்கு திமுக அரசு தான் காரணம் என தவெக நிர்வாகிகள் தெரிவித்து வந்தனர். அந்த வகையில் ஆதவ் அர்ஜூனா தனது எக்ஸ் தள பதிவில் புரட்சியை உண்டாக்க வேண்டும் என பதிவிட்டிருந்தார். உடனே அதனை நீக்கவும் செய்தார். அதற்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த் மற்றும் சிடிஆர் நிர்மல் குமார் முன்ஜாமின் மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆதவ் அர்ஜூனா தொடர்பாகவும் விசாரணை நடைபெற்றது. அதில் ஆதவ் அர்ஜுனா ஏதோ புரட்சியை ஏற்படுத்துவது போல கருத்து பதிவிட்டுள்ளார். இதன் பின்புலத்தை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது போல பொறுப்பற்ற பதிவுகளை காவல்துறை கவனத்துடன் விசாரித்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும். நீதிமன்ற உத்தரவுக்கு காத்திருக்கிறீர்களா? எனவும் அரசுக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு நாளை நடைபெறும்: உயர்நீதிமன்றம் உத்தரவு
வெள்ளி 10, அக்டோபர் 2025 12:45:08 PM (IST)

முதல்வர் மு.க.ஸ்டாலின் 24-ம் தேதி தென்காசி வருகை: ஏற்பாடுகள் தீவிரம்!
வெள்ளி 10, அக்டோபர் 2025 12:20:59 PM (IST)

தூத்துக்குடியில் தரமற்ற முறையில் கழிவுநீர் கால்வாய் பணிகள் - பொதுமக்கள் குற்றச்சாட்டு!
வெள்ளி 10, அக்டோபர் 2025 11:31:20 AM (IST)

நெல்லையில் எலிக்காய்ச்சல் அறிகுறியுடன் கல்லூரி மாணவர்கள் 7 பேர் மருத்துவமனையில் அனுமதி
வெள்ளி 10, அக்டோபர் 2025 11:16:51 AM (IST)

காதல் மனைவியை நடுரோட்டில் குத்திக்கொன்ற கணவர் : நடத்தை சந்தேகத்தில் பயங்கரம்!
வெள்ளி 10, அக்டோபர் 2025 11:13:44 AM (IST)

குரூப் 1 தேர்வர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
வெள்ளி 10, அக்டோபர் 2025 11:05:13 AM (IST)
