» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விஜயின் பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்யாதது ஏன்?- சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

வெள்ளி 3, அக்டோபர் 2025 5:41:30 PM (IST)



கரூரில் விபத்து ஏற்படுத்திய விவகாரத்தில் விஜயின் பிரச்சார வாகனத்தை ஏன் பறிமுதல் செய்யவில்லை? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கரூர் சம்பவத்தில் கூட்டங்களுக்கு கட்டுப்பாட கோரிய வழக்கில் அரசுத் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். அப்போது விஜயின் பரப்புரை வாகனத்தை பறிமுதல் செய்திருக்க வேண்டாமா? என்று காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து மேலும் நீதிபதி கூறியதாவது: விபத்து ஏற்படுத்திய விவகாரத்தில் விஜயின் பரப்புரை வாகனத்தை ஏன் பறிமுதல் செய்யவில்லை? தவெக பரப்புரையால் ஆன சேதங்களை கணக்கிட்டீர்களா? ஏன் இந்த தாமதம்?

விஜயின் பரப்புரை வாகனத்தில் இரு சக்கர வாகனங்கள் சிக்கிய வீடியோ உள்ளது. ஓட்டுநர் வெளியே எட்டிப் பார்த்தும், பேருந்தை நிறுத்தவே இல்லை. அதிர்ச்சியாக இருக்கிறது. வீடியோக்கள் பார்க்கும் போது வேதனை அளிக்கிறது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.

பேருந்து மோதியது தொடர்பாக வழக்கு பதிவு செய்யாவிட்டால் மக்கள் எப்படி நம்புவார்கள்? நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு கருணை காட்டுகிறீர்கள்? சம்பவம் நடந்தவுடன் தவெகவினர் எல்லோரும் அங்கிருந்து தப்பிவிட்டனர். கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவம் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு நிகழ்ந்துள்ளதுசட்டத்துக்கு முன் அனைவரும் சமம்; நீதிமன்றம் கண்மூடி வேடிக்கை பார்க்க முடியாது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory