» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மாணவியின் தாயாருக்கு மிரட்டல்: வன்கொடுமை சட்டத்தில் கராத்தே பயிற்சியாளர் கைது!!

புதன் 10, செப்டம்பர் 2025 8:15:01 AM (IST)

நெல்லை அருகே பயிற்சி வகுப்புக்கு வந்த மாணவியின் தாயாரை மிரட்டிய கராத்தே பயிற்சியாளரை பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

நெல்லை மாவட்டம் பேட்டையை அடுத்த சுத்தமல்லி அருகே உள்ள நரசிங்கநல்லூர் பொன்விழா நகரை சேர்ந்தவர் அப்துல் வகாப் (32). கராத்தே பிரிவில் டிப்ளமோ படித்துள்ள இவர், சுத்தமல்லி, பேட்டை கோடீஸ்வரன் நகர் பகுதியில் கராத்தே பயிற்சி வகுப்பு நடத்தி வருகிறார். இதேபோல் பாளை கே.டி.சி. நகர் பகுதியில் துப்பாக்கி சுடும் பயிற்சி வகுப்பும் நடத்தி வருகிறார். கராத்தே வகுப்புகளில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பள்ளி மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

அதில் சுத்தமல்லி பகுதியில் உள்ள டீக்கடை ஊழியர் ஒருவரின் 13 வயது மகளும் படித்து வருகிறார். இந்த சிறுமியை தினமும் காலையில் அவரது தாயார் பயிற்சி மையத்திற்கு கொண்டு சென்று விடுவது வழக்கம். அப்போது சிறுமியின் தாயாரிடம் அப்துல் வகாப் செல்போன் எண்ணை வாங்கிக்கொண்டு அடிக்கடி பேசி வந்துள்ளார். ஆனால் தவறான நோக்கத்தில் பழகிய அப்துல் வகாப், சிறுமியின் தாயிடம் ஆசை வார்த்தை கூறி பழகியுள்ளார்.

இதுகுறித்து பெண்ணின் கணவருக்கு தெரியவந்ததால் கண்டித்துள்ளார். எனவே அந்த பெண் அப்துல் வகாப்பிடம் பேசுவதை நிறுத்திவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த அப்துல் வகாப் சம்பவத்தன்று அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்றார். அங்கிருந்த பெண்ணிடம், நான் போன் செய்தபோது ஏன் எடுக்கவில்லை என்று கூறி தாக்கியதோடு, தன்னுடன் வந்து தனிமையில் இருக்க வேண்டும் என்று மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து அந்த பெண் சுத்தமல்லி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் இதுதொடர்பாக பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், ஆத்திரமூட்டும் வகையில் கடுமையான சொற்களால் திட்டுதல், கொலை மிரட்டல், அசிங்கமாக பேசுதல் ஆகிய 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அப்துல் வகாபை நேற்று அதிகாலையில் கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory