» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மக்கள்தொகை கணக்கெடுப்பு: இணையதளத்தில் சுய கணக்கெடுப்பு வசதி ஜூலை 17 முதல் அறிமுகம்!
வியாழன் 16, ஜூலை 2026 8:35:34 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் 2027-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான முதற்கட்ட சுய கணக்கெடுப்பு ஜூலை 17 முதல் ஆன்லைனில் துவங்க உள்ளது.
இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகத்தின் வழிகாட்டுதலின்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் 2027-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன்படி, ஜூலை 17, 2026 முதல் ஜூலை 31, 2026 வரை பொதுமக்கள் தங்களது இல்லங்களிலிருந்தே இணையதளம் வழியாகச் சுய கணக்கெடுப்பு (Self Enumeration) மேற்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சுய கணக்கெடுப்பு மேற்கொள்ளும் பொதுமக்களின் சந்தேகங்களைத் தீர்க்கும் வகையில், படிப்படியான விளக்கங்களுடன் கூடிய வழிகாட்டு காணொளி (Video Tutorial) தேசிய தகவலியல் மையம் (NIC) மூலம் தூத்துக்குடி மாவட்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் சுய கணக்கெடுப்பைத் தொடங்குவதற்கு முன்பு இந்தக் காணொளியைப் பார்த்து வழிமுறைகளை அறிந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சுய கணக்கெடுப்பு இணையதள முகவரி: se.census.gov.in
வழிகாட்டு காணொளி இணையதள முகவரி: thoothukudi.nic.in
களப் பணி மற்றும் ரகசியத்தன்மை விபரம்:
இதன் தொடர்ச்சியாக, ஆகஸ்ட் 1, 2026 முதல் ஆகஸ்ட் 30, 2026 வரை வீட்டுப்பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்புப் பணிக்காக, கணக்கெடுப்புப் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று களப்பணி மேற்கொள்ள உள்ளனர். கணக்கெடுப்பாளர்கள் வீட்டிற்கு வருகை தரும்போது, ஏற்கனவே இணைய வழியில் பதிவு செய்தவர்கள் தங்களது சுய கணக்கெடுப்பு குறிப்பு எண்ணை (Self Enumeration Reference Number) மட்டும் வழங்கினால் போதுமானது.
மக்கள்தொகை கணக்கெடுப்புச் சட்டத்தின் (Census Act) விதிகளின்படி, பொதுமக்கள் வழங்கும் அனைத்துத் தகவல்களும் முழுமையான ரகசியத்தன்மையுடன் பாதுகாக்கப்படும். பொதுமக்கள் அனைவரும் இந்தச் சுய கணக்கெடுப்பு வசதியைப் பயன்படுத்தி, கணக்கெடுப்புப் பணிக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு முதன்மை மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் தொழில் பழகுநர் பயிற்சி: பட்டதாரிகள் விண்ணப்பிக்க அழைப்பு!
வெள்ளி 17, ஜூலை 2026 4:42:15 PM (IST)

நாகர்கோவில் - கோவை அதிவிரைவு ரயிலில் கூடுதலாக ஒரு படுக்கை வசதிப் பெட்டி தற்காலிக இணைப்பு!
வெள்ளி 17, ஜூலை 2026 4:25:32 PM (IST)

நாகர்கோவில் கிளைச் சிறையில் கைதிகளின் பாதுகாப்பு கேள்விக்குறி: சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!
வெள்ளி 17, ஜூலை 2026 3:43:19 PM (IST)

இந்து முன்னணி நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு: மாநிலத் துணைத் தலைவர் கண்டனம்!
வெள்ளி 17, ஜூலை 2026 11:01:05 AM (IST)

சென்னை - கன்னியாகுமரி புல்லட் ரயில் திட்டம்: நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வலியுறுத்தல்!
வியாழன் 16, ஜூலை 2026 4:59:47 PM (IST)

சபரிவர்மன் கொலை வழக்கு: தென் தாமரைக்குளம் எஸ்.ஐ., ஆயுதப்படைக்கு மாற்றம்!
வியாழன் 16, ஜூலை 2026 4:24:17 PM (IST)



எம் ஆர் கஜேந்திரன்Jul 16, 2026 - 10:26:06 PM | Posted IP 172.7*****