» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
விசாரணைக் கைதி சபரிவர்மன் கொலை வழக்கு: கட்டி வைத்துத் தாக்கிய 8 கைதிகள் கைது!
வியாழன் 16, ஜூலை 2026 11:17:46 AM (IST)
நாகர்கோவில் கிளைச் சிறையில் விசாரணைக் கைதி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், வார்டன்களுடன் சேர்ந்து தாக்குதலில் ஈடுபட்டதாகச் சக கைதிகள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தங்காட்டைக் சேர்ந்த பெட்டிக்கடை உரிமையாளரும், மாற்றுத்திறனாளியுமான சபரிவர்மன் (33), தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் வைத்திருந்ததாகத் தென்தாமரைக்குளம் போலீசாரால் ஜூலை 9 ஆம் தேதி கைது செய்யப்பட்டு நாகர்கோவில் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார். ஜூலை 13 ஆம் தேதி காலை சபரிவர்மன் சிறையில் உயிரிழந்ததாக உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, உடல் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
உடலில் காயங்கள் இருந்ததால் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து நாகர்கோவில் குற்றவியல் நீதித்துறை நடுவர் சத்தியமூர்த்தி மற்றும் மாவட்ட எஸ்பி ஸ்டாலின் ஆகியோர் விசாரணை நடத்தி, சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றினர்.
வெளியான பிரேதப் பரிசோதனை அறிக்கையில், சபரிவர்மனின் உடலில் 19 இடங்களில் காயங்கள் இருந்ததுடன், அவர் தாக்கப்பட்டுக்கொலை செய்யபட்டிருப்பது உறுதியானது. இதையடுத்து நேசமணிநகர் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்தனர். முதற்கட்டமாகக் கிளைச்சிறை தலைமை வார்டன் திருமலைநம்பி, வார்டன்கள் சிவகுமார், ஜெகன் ஆகிய 3 பேரைப் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
போலீஸ் விசாரணையில், சிறைக்கு வந்த நாளில் இருந்தே சபரிவர்மனுக்கும் சக கைதிகளுக்கும் மோதல் இருந்துள்ளது. ஜூலை 12 ஆம் தேதி இரவில் ஏற்பட்ட தகராறில், சபரிவர்மனின் கை, கால்களைக் கட்டி வைத்து வார்டன்களுடன் சேர்ந்து சக கைதிகளும் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த சபரிவர்மன் சிறைக்குள்ளேயே உயிரிழந்துள்ளார். இக்கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 8 கைதிகளை நேசமணிநகர் போலீசார் கைது செய்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆடை உற்பத்தியில் புதுமையைப் புகுத்த வேண்டும் : நெசவாளர்களுக்கு ஆட்சியர் பிரதாப் வேண்டுகோள்
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:53:02 PM (IST)

பராமரிப்புப் பணி: குருவாயூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 8:42:23 AM (IST)

மயிலாடி சிற்பிகளின் கைவண்ணம்: ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 11 அடி உயர கிருஷ்ணர் சிலை!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 12:29:11 PM (IST)

தமிழக ரயில்வே வளர்ச்சிக்காகத் தனி அமைச்சரை நியமிக்க வேண்டும்: பயணிகள் சங்கம் தீர்மானம்!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 5:54:50 PM (IST)

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி களப பூஜை தொடங்கியது- திரளான பக்தர்கள் பங்கேற்பு
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 10:43:32 AM (IST)

வீராணமங்கலம் பழையாற்றில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்: திரளான பெண்கள் பங்கேற்பு!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 9:32:50 PM (IST)


