» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் பணி: ஜூலை 22 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!
வியாழன் 16, ஜூலை 2026 11:15:38 AM (IST)
கலிங்கராஜபுரம் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் பணிக்கு ஜூலை 22 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் கலிங்கராஜபுரம் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள ஒரு முதுகலை பட்டதாரி ஆசிரியர் (வேதியியல்) பணியிடத்திற்குத் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்பணியிடம் மாத தொகுப்பூதியம் 18,000 ரூபாய் வீதம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியுடைய நபர்கள் ஜூலை 16 முதல் ஜூலை 22 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை எழுத்துப்பூர்வமாக நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ உரிய கல்வித்தகுதிச் சான்றுகளுடன் (3 பிரதிகளில்) சமர்ப்பிக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் ஜூலை 22 ஆம் தேதி மாலை 5:45 மணிக்குள் விண்ணப்பங்களை ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சென்னை - கன்னியாகுமரி புல்லட் ரயில் திட்டம்: நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வலியுறுத்தல்!
வியாழன் 16, ஜூலை 2026 4:59:47 PM (IST)

சபரிவர்மன் கொலை வழக்கு: தென் தாமரைக்குளம் எஸ்.ஐ., ஆயுதப்படைக்கு மாற்றம்!
வியாழன் 16, ஜூலை 2026 4:24:17 PM (IST)

விசாரணைக் கைதி சபரிவர்மன் கொலை வழக்கு: கட்டி வைத்துத் தாக்கிய 8 கைதிகள் கைது!
வியாழன் 16, ஜூலை 2026 11:17:46 AM (IST)

கன்னியாகுமரியில் காமராஜர் 124-ஆவது பிறந்தநாள் விழா: அமைச்சர் செ.ராஜேஷ் குமார் மரியாதை!
புதன் 15, ஜூலை 2026 4:30:22 PM (IST)

நாகர்கோவில் சிறை மரண வழக்கு: தலைமைக் காவலர் உட்பட 3பேர் கைது - பணியிடை நீக்கம்!
புதன் 15, ஜூலை 2026 11:35:33 AM (IST)

பாலியல் குற்றவாளி காசியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி: சாகும் வரை ஆயுள் தண்டனை உறுதி!
புதன் 15, ஜூலை 2026 8:34:25 AM (IST)


