» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
சாரத்தில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு!
வியாழன் 9, ஜூலை 2026 8:25:20 PM (IST)
எப்பொதும்வென்றான் அருகே சோலார் நிறுவனத்தில் மின் வயர் கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர், சாரக் கம்பில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சிதம்பரம் பட்டி கிழக்குத் தெருவைச் சேர்ந்த பெரியசாமி மகன் மாரிக்காளை (47), பத்மாவதி சோலார் நிறுவனத்தில் மின் வயர்களை கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு வந்தார். குமரெட்டியாபுரம் விலக்கு அருகே, உயர் மின்னழுத்த மின் வயர்களுக்கு மேலாகப் புதிய மின் வயர்களைக் கொண்டு செல்வதற்காகக் கம்புகள் மூலம் சாரம் அமைத்து வேலை பார்த்து வந்தனர்.
பணிகள் முடிந்து சாரக் கம்புகளை அவிழ்க்கும் பணியில் மாரிக்காளை ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி சாரத்தில் இருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். உடனடியாக நிறுவன வாகனத்தின் மூலம் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு அவரைப் பரிசோதித்த அவசரப் பிரிவு மருத்துவர், மாரிக்காளை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து எப்பொதும்வென்றான் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இரயில் நிலையங்களில் ₹10 கட்டணத்தில் பேட்டரி கார் வசதி: கோட்ட மேலாளருக்கு கோரிக்கை!
புதன் 8, ஜூலை 2026 4:33:40 PM (IST)

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை - விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு
செவ்வாய் 7, ஜூலை 2026 4:43:28 PM (IST)

மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார் ஆய்வு
செவ்வாய் 7, ஜூலை 2026 12:44:21 PM (IST)

மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் : ரூ.2.79 இலட்சம் மதிப்பில் நலதிட்ட உதவிகள்
திங்கள் 6, ஜூலை 2026 5:51:33 PM (IST)

கன்னியாகுமரி புதிய டிஎஸ்பி பிரகாஷ் பொறுப்பேற்பு!
திங்கள் 6, ஜூலை 2026 3:48:24 PM (IST)

சின்னமுட்டம் துறைமுகத்தில் மீனவர்களிடையே பயங்கர மோதல்: கல்வீச்சு தாக்குதலில் 5பேர் காயம்!
திங்கள் 6, ஜூலை 2026 12:01:28 PM (IST)



ஐய்யோJul 10, 2026 - 03:40:31 PM | Posted IP 172.7*****