» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடியில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்: மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு!
புதன் 8, ஜூலை 2026 3:22:30 PM (IST)
மின்தடை காரணமாக தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் நாளை (ஜூலை 9) வியாழக்கிழமை குடிநீர் விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாநகரப் பகுதிகளுக்குக் குடிநீர் வழங்கும் வல்லநாடு மின் பாதையில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், நாளை (ஜூலை 9) வியாழக்கிழமை அன்று மாநகரில் குடிநீர் விநியோகம் இருக்காது எனத் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சி. பிரியங்கா தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாநகரின் முக்கியக் குடிநீர் விநியோகப் பாதையான வல்லநாடு தலைமை நீரேற்று நிலையம், கலியாவூர் மற்றும் கீழ வல்லநாடு குடிநீர் சுத்திகரிப்பு நிலையப் பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கும் கொம்புகாரநத்தம் துணை மின் நிலையத்தில் வரும் 09.07.2026 வியாழக்கிழமை அன்று மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதன் காரணமாக, வரும் வியாழக்கிழமை காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் முழுமையாக நிறுத்தப்படும். எனவே, மாநகரப் பகுதி பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான குடிநீரை முன்னதாகவே சேமித்து, அதனைச் சிக்கனமான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையர் சி. பிரியங்கா கேட்டுக்கொண்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இரயில் நிலையங்களில் ₹10 கட்டணத்தில் பேட்டரி கார் வசதி: கோட்ட மேலாளருக்கு கோரிக்கை!
புதன் 8, ஜூலை 2026 4:33:40 PM (IST)

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை - விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு
செவ்வாய் 7, ஜூலை 2026 4:43:28 PM (IST)

மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார் ஆய்வு
செவ்வாய் 7, ஜூலை 2026 12:44:21 PM (IST)

மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் : ரூ.2.79 இலட்சம் மதிப்பில் நலதிட்ட உதவிகள்
திங்கள் 6, ஜூலை 2026 5:51:33 PM (IST)

கன்னியாகுமரி புதிய டிஎஸ்பி பிரகாஷ் பொறுப்பேற்பு!
திங்கள் 6, ஜூலை 2026 3:48:24 PM (IST)

சின்னமுட்டம் துறைமுகத்தில் மீனவர்களிடையே பயங்கர மோதல்: கல்வீச்சு தாக்குதலில் 5பேர் காயம்!
திங்கள் 6, ஜூலை 2026 12:01:28 PM (IST)



KumarJul 8, 2026 - 05:29:19 PM | Posted IP 104.2*****