» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலை தடுக்க வேண்டும் : தூத்துக்குடி பொதுக்குழுவில் தீர்மானம்
வெள்ளி 12, ஜூன் 2026 3:16:03 PM (IST)

சிறுபான்மை மக்கள் மீதான மனித உரிமை மீறல்களை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும் என்று தூத்துக்குடியில் நடைபெற்ற சிறுபான்மை மக்கள் உரிமைகள் இயக்கத்தின் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் அகில இந்திய ஜனநாயக சிறுபான்மை மக்கள் உரிமைகள் இயக்கத்தின் பொதுக்குழு கூடுகை நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு இயக்கத்தின் தலைவர் எஸ்.ஜெயராஜ் தலைமை தாங்கினார். மாநிலத் துணைத்தலைவர் பி.எம்.மோசஸ், மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் ஜே.சாம் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: எங்கு பார்த்தாலும் மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருகின்றன; இவற்றைத் தடுத்து நிறுத்த நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். சிறுபான்மையினர் உரிமைகள்: சிறுபான்மை மக்கள், அதிலும் குறிப்பாகக் கிறிஸ்தவர்களுடைய உரிமைகள் அதிகளவில் மறுக்கப்பட்டு வருகின்றன.
ஜெபக் கூட்டங்கள் மற்றும் வீட்டுக் கூட்டங்கள் நடத்தத் தடைகள் விதிக்கப்படுகின்றன. கிறிஸ்தவர்கள் 5 அல்லது 10 பேர் ஒன்றாகக் கூடினாலே மதமாற்றம் செய்ய வருகிறார்கள் என்று கூறி மதவாதிகள் தாக்கும் நிலை காணப்படுகிறது. இந்த விவகாரங்களை மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்குக் கொண்டு செல்லக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்பதையும், அதன் இறையாண்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி, அனைத்து மதத்தினரும் சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாக வாழ அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும், தங்களுக்கு அளிக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுக்கவும், சாதி, மத, இன பாகுபாடின்றி மாண்புடனும் கண்ணியத்துடனும் இயக்கத்தை வழிநடத்தவும் கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில், மாநில ஒருங்கிணைப்புச் செயலாளர் சாமிஜாண், மாநில துணைச் செயலாளர் அண்டோ மஸ்கர்ணாஸ், மாநில செய்தித் தொடர்பாளர் ஜேம்ஸ் நிக்கோலஸ் ராஜா, மாநில துணைச் செயலாளர் டாக்டர் மரிய கஸ்மிர் ராஜா, மாநில துணை பொதுச் செயலாளர் ராஜேஷ், மாநில பொருளாளர் ரதீஷ்குமார், மாநில இணைச்செயலாளர் ஜோஸ்வா நித்தியராஜ், மாநில இளைஞரணி தலைவர் ஆனந்தன் மற்றும் மாநில மகளிரணி தலைவி சாந்தி ஜெயராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தெற்கு மாவட்ட மண்டலத் தலைவர் ராஜா, தெற்கு மாவட்டத் தலைவர் வி.எஸ்.மோசஸ், மாவட்டத் தலைவர் அமலதாஸ், வடக்கு மாவட்ட மண்டலத் தலைவர் ஏ. சிலுவை ராஜா, வடக்கு மாவட்ட மண்டல செயலாளர் ஏ. சேவியர், வடக்கு மாவட்ட மண்டல துணைத் தலைவர் ஏ.ஆரோக்யம், வடக்கு மாவட்ட மண்டல பொருளாளர் ஜேசு பாலன், வடக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் தொம்மை அந்தோணி, தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் ஏ. சாமுவேல்ராஜா, தெற்கு மாவட்ட செய்தித்தொடர்பாளர் ராபின்சன், வடக்கு மாவட்ட மகளிரணி தலைவி வழக்கறிஞர் எஸ்.லூயிஷா, தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் அந்தோணி ராஜ் மற்றும் தெற்கு மாவட்ட துணைத் தலைவர் பர்னபாஸ் தங்கதுரை உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும்: பயணிகள் சங்கம் வலியுறுத்தல்!
சனி 13, ஜூன் 2026 12:41:39 PM (IST)

தவெகவில் இணையும் விஜயதாரணி: பனையூர் அலுவலகத்தில் குவிந்த முக்கியப் புள்ளிகள்!
சனி 13, ஜூன் 2026 11:21:58 AM (IST)

ஆசாரிபள்ளம் மருத்துவமனை சாலையில் ஆபத்தான பள்ளம்: போக்குவரத்து கடுமையாகப் பாதிப்பு!
வெள்ளி 12, ஜூன் 2026 12:36:58 PM (IST)

இரட்டைக்கரை கால்வாயில் ஆட்சியர் பிரதாப் ஆய்வு: ஆக்கிரமிப்புகளைத் தடுத்துக் கண்காணிக்க உத்தரவு!
வெள்ளி 12, ஜூன் 2026 11:18:08 AM (IST)

ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் குளிர்சாதனப் பெட்டி இணைப்பு: ஜூன் 12, 26 தேதிகளில் அமல்!
புதன் 10, ஜூன் 2026 5:38:18 PM (IST)

பணம் மோசடி: சப்-இன்ஸ்பெக்டர் மீது நாயை ஏவிக் கடிக்க வைத்த கொடூரம் - தம்பதி அதிரடி கைது!
செவ்வாய் 9, ஜூன் 2026 12:45:53 PM (IST)



நெல்லை umaJun 13, 2026 - 08:49:52 AM | Posted IP 172.7*****