» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
இரட்டைக்கரை கால்வாயில் ஆட்சியர் பிரதாப் ஆய்வு: ஆக்கிரமிப்புகளைத் தடுத்துக் கண்காணிக்க உத்தரவு!
வெள்ளி 12, ஜூன் 2026 11:18:08 AM (IST)

கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வடக்குப் பேயங்குழி இரட்டைக்கரை கால்வாயினை மாவட்ட ஆட்சியர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வுக்குப் பின் மாவட்ட ஆட்சியர் பிரதாப் தெரிவித்ததாவது: விவசாயப் பணிகளுக்குத் தடையின்றித் தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில், மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர்நிலைகள் மற்றும் கால்வாய்களைத் தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, வடக்குப் பேயங்குழி கிராமத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் இரட்டைக்கரை கால்வாயில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
கால்வாயில் தண்ணீர் தங்குதடையின்றிச் சென்று கொண்டிருப்பதை நேரில் பார்வையிட்டதோடு, தூர்வாரப்பட்டதன் மூலம் நீரோட்டம் சீராக உள்ளதா என்பதும் ஆய்வு செய்யப்பட்டது. கால்வாயில் திறந்து விடப்படும் நீரானது, எவ்விதத் தடையுமின்றி பாசனப் பரப்பின் கடைமடைப் பகுதி வரை முழுமையாகச் சென்றடைவதை அதிகாரிகள் கட்டாயம் உறுதி செய்ய வேண்டும்.
நீர்வழிப் பாதையில் எங்கும் அடைப்புகளோ அல்லது ஆக்கிரமிப்புகளோ ஏற்படாத வண்ணம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனத் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பிரதாப் தெரிவித்தார். ஆய்வின்போது நீர்வளத்துறை செயற்பொறியாளர் வசந்தி, உதவி செயற்பொறியாளர் கதிரவன், உதவிப் பொறியாளர் மற்றும் துறை அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வேளாங்கண்ணி சிறப்பு ரயிலை தொடர்ந்து இயக்க வேண்டும்: பயணிகள் சங்கம் கோரிக்கை!
சனி 29, ஆகஸ்ட் 2026 5:36:37 PM (IST)

கன்னியாகுமரியில் மாபெரும் காத்தாடி திருவிழா: சுற்றுலாத்துறை அமைச்சர் துவக்கி வைத்தார்!
சனி 29, ஆகஸ்ட் 2026 11:03:05 AM (IST)

பேரூராட்சித் தலைவர் மற்றும் அவரது கணவர் கட்சியிலிருந்து நீக்கம் - சிபிஎம் அதிரடி!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 3:51:42 PM (IST)

குமரி மாவட்டத்தில் ரூ.1041 கோடியில் நெடுஞ்சாலை பணிகள் : ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு!
புதன் 26, ஆகஸ்ட் 2026 12:04:00 PM (IST)

தோவாளையிலிருந்து கேரளாவுக்கு மலர்கள் கொண்டு செல்ல சிறப்பு 'மேமு' ரயில்: பயணிகள் சங்கம் கோரிக்கை!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 5:52:59 PM (IST)

தாயைக் கொன்று ஜாமீனில் வந்த வாலிபர் பக்கத்து வீட்டுப் பெண்ணைக் குத்திக் கொன்ற கொடூரம்!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 8:48:42 AM (IST)


