» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
அரசியல் கட்சிக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு: காவலர் சஸ்பெண்ட் - எஸ்பி அதிரடி உத்தரவு!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 4:46:18 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சிக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதாக காவலர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராகப் பணிபுரிந்து வருபவர் சபரி குமார் (33). இவர் கோவில்பட்டியில் உள்ள காவலர் குடியிருப்புப் பகுதியில் வசித்து வருகிறார். தேர்தல் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சபரி குமார் தனது குடியிருப்பில் உள்ள மற்ற காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடம் கோவில்பட்டி தொகுதி அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்ததாகக் கூறப்படுகிறது.
அரசுப் பணியில் இருந்துகொண்டு ஒரு அரசியல் கட்சிக்கு ஆதரவாகக் காவலர் செயல்பட்டது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இது குறித்து உடனடியாக விசாரணை நடத்த எஸ்பி மதன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். துணை நிலை அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், காவலர் சபரி குமார் தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, அரசு ஊழியர்களுக்கான நடத்தை விதிகளை மீறியதற்காக சபரி குமாரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். வாக்குப்பதிவிற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டிய காவலரே இத்தகைய செயலில் ஈடுபட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
செய்தி வாசிப்பாளர்Apr 21, 2026 - 05:17:57 PM | Posted IP 104.2*****
அது எந்த அரசியல்கட்சிக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு என்று சொல்லுங்க. அது தான் உண்மையான செய்தி, ஒண்ணுமில்லாத தெரியாத செய்தி எல்லாம் குப்பை.
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 75.60% வாக்குப்பதிவு: தொகுதி வாரியான முழு விவரம்
வெள்ளி 24, ஏப்ரல் 2026 5:08:39 PM (IST)

குமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 12:26:16 PM (IST)

தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகள் திருப்திகரமாக இல்லை: எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ புகார்
வியாழன் 23, ஏப்ரல் 2026 12:52:32 PM (IST)

தேர்தல் எதிரொலி : குமரியில் திருவள்ளுவர் சிலை, கண்ணாடி கூண்டு பாலத்திற்கு படகு சேவை ரத்து!
புதன் 22, ஏப்ரல் 2026 5:29:39 PM (IST)

சட்டவிரோத விற்பனைக்காக பதுக்கல்: 306 மது பாட்டில்கள் பறிமுதல்!
புதன் 22, ஏப்ரல் 2026 12:29:44 PM (IST)

தேர்வு முடிவு பயம்: 10-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை – பெற்றோர்கள் சோகம்!
புதன் 22, ஏப்ரல் 2026 8:23:00 AM (IST)


அந்தோணிசாமிApr 22, 2026 - 08:55:14 AM | Posted IP 162.1*****