» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தமிழகத்திலேயே கடைசி இடம்: வாக்குப்பதிவில் பின் தங்கிய குமரி மாவட்டம்!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 5:08:39 PM (IST)
தமிழக சட்டமன்றத் தேர்தலில் மாநிலம் முழுவதும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் மட்டும் குறைந்தபட்சமாக 75.61% வாக்குகளைப் பதிவு செய்து மாநில அளவில் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.
குமரி மாவட்டத்தில் வாக்குப்பதிவு சதவீதத்தை உயர்த்த மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தலைமையில் பல்வேறு நூதன விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதனால் இந்த முறை 90 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தேர்தல் முடிவுகள் இந்த எதிர்பார்ப்பைப் பொய்யாக்கியுள்ளன.
தேர்தல் நாளான நேற்று (வியாழக்கிழமை) ஒரு சிறப்பான முகூர்த்த நாளாக அமைந்தது. மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான திருமணங்கள் நடைபெற்றன. திருமண வீட்டார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றதால், கணிசமான வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு வரவில்லை எனத் தெரிகிறது.
கடந்த சில நாட்களாக குமரி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் வழக்கத்திற்கு மாறாகக் கடுமையாக இருந்து வருகிறது. இதனால் முதியவர்கள் மற்றும் பெண்கள் மதிய நேரங்களில் வெளியே வரத் தயங்கியதும் ஒரு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் வெளிநாடுகளிலும், சென்னை, பெங்களூரு போன்ற வெளிமாநிலங்களிலும் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களில் பெரும் பகுதியினர் வாக்களிக்கச் சொந்த ஊருக்கு வராததும் சதவீதக் குறைவுக்கு ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது.
ஆட்சியரின் தீவிர முயற்சி மற்றும் விழிப்புணர்வுப் பணிகளுக்கு இடையேயும் குமரி மாவட்டம் பின்னடைவைச் சந்தித்திருப்பது அரசியல் கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. கல்வி அறிவில் முன்னணியில் இருக்கும் ஒரு மாவட்டத்தில், ஜனநாயகக் கடமையாற்றுவதில் ஏற்பட்டுள்ள இந்தத் தொய்வு பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
தொகுதி வாரியான வாக்குப்பதிவு விவரங்கள் :
கன்னியாகுமரி 81.43
நாகர்கோவில் 74.72
குளச்சல் 74.12
பத்மநாபபுரம் 75.41
விளவங்கோடு 75.77
கிள்ளியூர் 71.29
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வேளாங்கண்ணி சிறப்பு ரயிலை தொடர்ந்து இயக்க வேண்டும்: பயணிகள் சங்கம் கோரிக்கை!
சனி 29, ஆகஸ்ட் 2026 5:36:37 PM (IST)

கன்னியாகுமரியில் மாபெரும் காத்தாடி திருவிழா: சுற்றுலாத்துறை அமைச்சர் துவக்கி வைத்தார்!
சனி 29, ஆகஸ்ட் 2026 11:03:05 AM (IST)

பேரூராட்சித் தலைவர் மற்றும் அவரது கணவர் கட்சியிலிருந்து நீக்கம் - சிபிஎம் அதிரடி!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 3:51:42 PM (IST)

குமரி மாவட்டத்தில் ரூ.1041 கோடியில் நெடுஞ்சாலை பணிகள் : ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு!
புதன் 26, ஆகஸ்ட் 2026 12:04:00 PM (IST)

தோவாளையிலிருந்து கேரளாவுக்கு மலர்கள் கொண்டு செல்ல சிறப்பு 'மேமு' ரயில்: பயணிகள் சங்கம் கோரிக்கை!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 5:52:59 PM (IST)

தாயைக் கொன்று ஜாமீனில் வந்த வாலிபர் பக்கத்து வீட்டுப் பெண்ணைக் குத்திக் கொன்ற கொடூரம்!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 8:48:42 AM (IST)



பஸ்Nov 25, 1777 - 11:30:00 AM | Posted IP 162.1*****