» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
இரட்டைக் கொலை வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை: மகிளா நீதிமன்றம் தீர்ப்பு!
சனி 11, ஏப்ரல் 2026 5:05:18 PM (IST)
கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே முட்டம் பகுதியில் நடந்த இரட்டைக் கொலை வழக்கில், குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நாகர்கோவில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2022-ஆம் ஆண்டு, ஜூன் 7-ஆம் தேதி முட்டம் பகுதியைச் சேர்ந்த திரேசம்மாள் (90) மற்றும் பௌலின் மேரி (48) ஆகிய இருவரும் அவர்களது வீட்டில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர். பௌலின் மேரியின் தங்கை பலமுறை போன் செய்தும் அவர் எடுக்காததால், நேரில் சென்று பார்த்தபோது வீடு பூட்டப்பட்டிருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்றபோதுதான் இந்த இரட்டைக் கொலை வெளிச்சத்திற்கு வந்தது.இந்தக் கொலை தொடர்பாக வெள்ளிச்சந்தை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கடியப்பட்டணம் பாத்திமா தெருவைச் சேர்ந்த அமலசுதன் (39) என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலை, திருப்பு மற்றும் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
நாகர்கோவில் விரைவு மகிளா நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்கள் முறையாகச் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், நீதிபதி இன்று தீர்ப்பளித்தார். அதில், அமலசுதன் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதால், அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
நீதிமன்ற வழக்கு விசாரணைகளைத் தொடர்ந்து கண்காணித்து, குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தருவதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் முன்னுரிமை அளித்துச் செயல்பட்டு வருகிறார். இந்த வழக்கில் சிறப்பாகப் புலனாய்வு செய்து தண்டனை பெற்றுத் தந்த குளச்சல் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் வெள்ளிச்சந்தை காவல் நிலைய உதவி ஆய்வாளர் அரசு குற்ற வழக்கறிஞர்
நீதிமன்றக் காவலர் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இரயில் நிலையங்களில் ₹10 கட்டணத்தில் பேட்டரி கார் வசதி: கோட்ட மேலாளருக்கு கோரிக்கை!
புதன் 8, ஜூலை 2026 4:33:40 PM (IST)

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை - விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு
செவ்வாய் 7, ஜூலை 2026 4:43:28 PM (IST)

மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார் ஆய்வு
செவ்வாய் 7, ஜூலை 2026 12:44:21 PM (IST)

மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் : ரூ.2.79 இலட்சம் மதிப்பில் நலதிட்ட உதவிகள்
திங்கள் 6, ஜூலை 2026 5:51:33 PM (IST)

கன்னியாகுமரி புதிய டிஎஸ்பி பிரகாஷ் பொறுப்பேற்பு!
திங்கள் 6, ஜூலை 2026 3:48:24 PM (IST)

சின்னமுட்டம் துறைமுகத்தில் மீனவர்களிடையே பயங்கர மோதல்: கல்வீச்சு தாக்குதலில் 5பேர் காயம்!
திங்கள் 6, ஜூலை 2026 12:01:28 PM (IST)


