» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தேர்தல் நடத்தை விதிகளால் வணிகம் பாதிப்பு: போராட்டம் நடத்த வணிகர் சங்கம் முடிவு!
வியாழன் 26, மார்ச் 2026 12:09:02 PM (IST)

தேர்தல் நடத்தை விதிகளால் ஒட்டுமொத்த வணிகச் செயல்பாடுகளும் முடங்கும் சூழல் உருவாகியுள்ளதாக கன்னியாகுமரி மாவட்ட வணிகர் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறைகளால் பொதுமக்களும் வணிகர்களும் சந்தித்து வரும் சிரமங்கள் குறித்து, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தலைவர் கே. பாபு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது : கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சுமார் ரூ. 30 லட்சம் தொகையும் பொதுமக்களுக்குச் சொந்தமானது.
இவை வீடுகளில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகள், மருத்துவச் செலவுகள் மற்றும் அவசரத் தேவைகளுக்காகக் கொண்டு செல்லப்பட்ட பணமே ஆகும் என அவர் தெரிவித்தார். தொடர் சோதனைகளால் பொதுமக்கள் மத்தியில் ஒருவித அச்சமும் பீதியும் நிலவுகிறது. இதன் காரணமாக, சந்தைகளுக்கு மக்கள் வருவது குறைந்து, மாவட்டத்தின் ஒட்டுமொத்த வணிகச் செயல்பாடுகளும் முடங்கும் சூழல் உருவாகியுள்ளதாகக் கவலை தெரிவித்தார்.
தற்போது நடைமுறையில் உள்ள ரூ. 50,000 வரை மட்டும் ரொக்கப்பணம் கொண்டு செல்லலாம் என்ற விதியைத் தற்போதைய காலத்திற்கு ஏற்ப மாற்ற வேண்டும். இந்த வரம்பை இரண்டு லட்சம் ரூபாய் ஆக உயர்த்த வேண்டும். தேர்தல் ஆணையம் இந்த நியாயமான கோரிக்கையை ஏற்று பண வரம்பை உயர்த்தாவிட்டால், வணிகர்களின் நலன் காக்க மாவட்ட அளவில் வணிகர்கள் சார்பில் மிகப்பெரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்," என்று தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் தொழில் பழகுநர் பயிற்சி: பட்டதாரிகள் விண்ணப்பிக்க அழைப்பு!
வெள்ளி 17, ஜூலை 2026 4:42:15 PM (IST)

நாகர்கோவில் - கோவை அதிவிரைவு ரயிலில் கூடுதலாக ஒரு படுக்கை வசதிப் பெட்டி தற்காலிக இணைப்பு!
வெள்ளி 17, ஜூலை 2026 4:25:32 PM (IST)

நாகர்கோவில் கிளைச் சிறையில் கைதிகளின் பாதுகாப்பு கேள்விக்குறி: சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!
வெள்ளி 17, ஜூலை 2026 3:43:19 PM (IST)

இந்து முன்னணி நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு: மாநிலத் துணைத் தலைவர் கண்டனம்!
வெள்ளி 17, ஜூலை 2026 11:01:05 AM (IST)

சென்னை - கன்னியாகுமரி புல்லட் ரயில் திட்டம்: நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வலியுறுத்தல்!
வியாழன் 16, ஜூலை 2026 4:59:47 PM (IST)

சபரிவர்மன் கொலை வழக்கு: தென் தாமரைக்குளம் எஸ்.ஐ., ஆயுதப்படைக்கு மாற்றம்!
வியாழன் 16, ஜூலை 2026 4:24:17 PM (IST)


