» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பேச்சிப்பாறை அருகே மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சியவர் கைது: 10 லிட்டர் ஊறல் பறிமுதல்
வெள்ளி 27, பிப்ரவரி 2026 12:44:43 PM (IST)

பேச்சிப்பாறை அருகே மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சியவரை மதுவிலக்கு பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 10 லிட்டர் சாராய ஊறல் மற்றும் உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
குமரி மாவட்டம் இரணியலைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தக்கலை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு, பேச்சிப்பாறை அடுத்த மணலோடை - கிள்ளிக்கோணம் பகுதியில் சாராயம் காய்ச்சப்படுவதாக ரகசியத் தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலின் அடிப்படையில், மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கமலி, சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் நேற்று அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, மணலோடை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்றிருந்த ஒருவரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்ததால், போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர் கிள்ளிக்கோணம் பகுதியைச் சேர்ந்த தங்கப்பன் மகன் சதீஷ் (43) என்பது தெரியவந்தது. மேலும், அவர் அப்பகுதியில் உள்ள மலை மறைவிடத்தில் சட்டவிரோதமாகச் சாராயம் காய்ச்சி வந்ததையும் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து, அவர் சாராயம் காய்ச்சப் பயன்படுத்திய 10 லிட்டர் சாராய ஊறல், பானை, ரப்பர் டியூப்புகள், குடம், கப் மற்றும் மரப்பலகைகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட சதீஷ், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜூன் 1 முதல் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க அரசு ஆணை: குமரி மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி!
சனி 30, மே 2026 4:02:42 PM (IST)

கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்ல அனுமதி : அனிதா கருத்துக்கு மனோ தங்கராஜ் எதிர்ப்பு!
சனி 30, மே 2026 11:33:26 AM (IST)

நாகர்கோவில்-எழும்பூர் இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம்: தெற்கு ரயில்வே தகவல்
சனி 30, மே 2026 10:41:53 AM (IST)

இரத்த தானம் வழங்குவதில் மருத்துவ பணியாளர்கள் முன்மாதிரி : அமைச்சர் ராஜேஷ் குமார் பெருமிதம்!
வெள்ளி 29, மே 2026 3:59:42 PM (IST)

கன்னியாகுமரி வந்த விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்!
வியாழன் 28, மே 2026 8:29:39 PM (IST)

நாகர்கோவில் – கோவை அதிவிரைவு ரயிலில் கூடுதல் பொதுப்பெட்டி இணைப்பு: தற்காலிக நடவடிக்கை!
வியாழன் 28, மே 2026 8:23:21 PM (IST)


