» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மத்திய அரசுப் பள்ளியில் காலிப் பணியிடங்கள் : விண்ணப்பங்கள் வரவேற்பு!
சனி 21, பிப்ரவரி 2026 11:29:32 AM (IST)
தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்குச் சொந்தமான அணுசக்தி மத்திய பள்ளியில் (AECS) ஆசிரியர் மற்றும் அலுவலகப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் மற்றும் தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்பட உள்ளன.
தூத்துக்குடி மாவட்டம் பழையகாயலில் அணுசக்தி கல்விச் சங்கத்தின் (AEES) கீழ் இந்த அணுசக்தி மத்திய பள்ளி (AECS) இயங்கி வருகிறது. இது முதன்மையாக அணுசக்தித் துறையில் (DAE) பணிபுரிபவர்களின் குழந்தைகளின் கல்வித் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக நடத்தப்படுகிறது.
கல்வித் தகுதி மற்றும் ஊதியம்
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் பணியைப் பொறுத்து அதிகபட்சமாக ரூ. 35,000 வரை மாத ஊதியம் வழங்கப்படும்.
பட்டதாரி ஆசிரியர் (TGT): அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் தொடர்புடைய பாடத்தில் 50% மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டமும், பி.எட். (B.Ed.) படிப்பும் முடித்திருக்க வேண்டும். மேலும், ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் (CTET/STET) தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம்.
உடற்கல்வி ஆசிரியர் (PET): நான்கு ஆண்டு ஒருங்கிணைந்த உடற்கல்வி படிப்பு அல்லது பி.பி.எட். (B.P.Ed.) படிப்பில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தட்டச்சர் (Typist): பிளஸ் டூ (12-ஆம் வகுப்பு) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதனுடன் தட்டச்சுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம்.
வயது வரம்பு
ஆசிரியர் பணியிடங்கள்: 18 வயது முதல் 65 வயது வரை உள்ள தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தட்டச்சர் பணியிடம்: 18 வயது முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும் (அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு).
தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள நிபந்தனைகளின்படி விண்ணப்பிக்கலாம்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவிலில் சுதந்திரப் போராட்ட வீரர் பொன்னப்ப நாடார் திருவுருவச் சிலை: முதல்வர் திறந்து வைத்தார்!
புதன் 25, பிப்ரவரி 2026 4:00:18 PM (IST)

வைகுண்டசாமி பிறந்த நாள்: மார்ச் 4-ம் தேதி குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
புதன் 25, பிப்ரவரி 2026 3:24:30 PM (IST)

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 90 வீடுகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
செவ்வாய் 24, பிப்ரவரி 2026 4:43:37 PM (IST)

திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவு வாயில்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
செவ்வாய் 24, பிப்ரவரி 2026 3:13:44 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் 15.10 லட்சம் வாக்காளர்கள்: இறுதி பட்டியல் வெளியீடு
திங்கள் 23, பிப்ரவரி 2026 3:31:34 PM (IST)

முதல்வர் வருகை எதிரொலி: குமரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்; ட்ரோன்கள் பறக்க தடை!
திங்கள் 23, பிப்ரவரி 2026 12:20:11 PM (IST)


jamesFeb 21, 2026 - 06:52:13 PM | Posted IP 172.7*****