» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
போட்டித் தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்: ஆட்சியர் தகவல்!
புதன் 4, பிப்ரவரி 2026 3:47:50 PM (IST)
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (SSC/IBPS/ரயில்வே) மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-I, II, IIA, IV தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.,
இது குறித்து மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "மத்திய அரசு பணியாளர் தேர்வாணையங்கள் (SSC/IBPS/Railways) மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையங்களால் (குரூப்-I,II,IIA,IV) ஆண்டுதோறும் அரசுத் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு பல்வேறு போட்டித் தேர்வுகளை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாராகும் பொருட்டு திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் கட்டணமில்லா பயிற்சி வகுப்பு 05.02.2026 (வியாழக்கிழமை) அன்று காலை 10.30 மணிக்கு தொடங்கப்படவுள்ளது.
இப்பயிற்சி வகுப்பு திறன் வாய்ந்த ஆசிரியர்களை கொண்டு Smart Board வசதியுடன் நடத்தப்படுகிறது. வாரந்தோறும் மாதிரி தேர்வுகளும் மற்றும் மாநில அளவிலான முழு மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். மேலும் TNPSC, TNUSRB, SSC உள்ளிட்ட அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான புத்தகங்கள் இவ்வலுவலக தன்னார்வ பயிலும் வட்ட நூலகத்தில் உள்ளன. மாணவர்கள் சுயமாக போட்டித்தேர்வுக்கு தயாராகும் வகையில் study hall வசதியும் உள்ளது.
பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான மென்பாடக்குறிப்புகள் https://tamilnaducareerservices.tn.gov.in/ என்ற இணையத்தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் போட்டித்தேர்வுகள் குறித்து தகவல்களை பெற NELLAI EMPLOYMENT OFFICE என்ற Telegram Channel இல் இணையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள குலவணிகர்புரம், இரயில்வே கேட் அருகில், பாளையங்கோட்டையில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு 05.02.2026 அன்று காலை 10.30 மணிக்கு Passport Size புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் நேரில் வருமாறு திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு பேரணி
புதன் 4, பிப்ரவரி 2026 1:22:15 PM (IST)

முதல்வர் மு.க. ஸ்டாலின் 19ம் தேதி குமரி வருகை : அரசு விழாவில் பங்கேற்கிறார்!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 12:15:42 PM (IST)

நாகர்கோவில் மார்டன் பள்ளியில் விதைப்பந்து விழிப்புணர்வு
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 10:49:12 AM (IST)

விளவங்கோடு அருகே குளத்தில் ஆண் சடலம் மீட்பு!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 10:47:38 AM (IST)

திருவனந்தபுரம் - நாகர்கோவில் மூன்றாவது ரயில் பாதை : பட்ஜெட்டில் அறிவிக்கப்படுமா?
சனி 31, ஜனவரி 2026 12:07:03 PM (IST)

மின் இணைப்பு கேட்டபெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த அதிகாரி பணியிடை நீக்கம்!
சனி 31, ஜனவரி 2026 11:16:03 AM (IST)

