» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் மகாத்மா காந்தி நினைவு தினம் அனுசரிப்பு!

வெள்ளி 30, ஜனவரி 2026 12:43:06 PM (IST)



கன்னியாகுமரியில் காந்தியடிகளின் 79-வது நினைவு தினத்தையொட்டி காந்தி மண்டபத்திலுள்ள அன்னாரது திருவுருவ படத்திற்கு, பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

கன்னியாகுமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், அண்ணல் காந்தியடிகளின் 79-வது நினைவு தினத்தையொட்டி கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபத்தில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவப்படத்திற்கு, பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் இன்று (30.01.2026) மலர் தூவி மரியாதை செலுத்தி, தெரிவிக்கையில் "அண்ணல் காந்தியடிகள் , இந்தியாவில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை மட்டுமல்லாது, உலக நாடுகளே போற்றுகின்ற வகையில் செயல்பட்டவர். 

இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கி தந்த காந்திஜி அவர்களின் பெருமைகளையும், தியாகங்களையும், அன்னாரது அமைதி மார்க்கத்தையும், கொள்கைகளையும், அவரது வழிகாட்டுதலின்படி, நாம் அனைவரும் நம் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறு செய்வது, அண்ணல் காந்தியடிகள் அவர்களுக்கு மிகவும் பெருமை சேர்ப்பதாகும் என்று தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், தமிழ்நாடு மாநில மீனவர் நல வாரிய தலைவர் ஜோசப் ஸ்டாலின், நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.எஸ்.காளீஸ்வரி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) எஸ்.செல்வலெட் சுஷ்மா, கன்னியாகுமரி நகர்மன்ற தலைவர் குமரி ஸ்டீபன், கன்னியாகுமரி நகராட்சி ஆணையர் கண்மணி, அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் கந்தசாமி, சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory