» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கிறிஸ்தவ ஆலயத்தில் புதிய பங்குதந்தைக்கு எதிர்ப்பு : தூத்துக்குடியில் பரபரப்பு
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:40:33 PM (IST)

தூத்துக்குடியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் புதிய பங்கு தந்தைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு தரப்பினர் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி இன்னாசியார்புரத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் பங்குத்தந்தையாக பணியாற்றி வந்தவர் மீது பல்வேறு புகாரின் பேரில் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு வழிபாட்டை முன்னிட்டு தற்காலிகமாக பொறுப்பேற்றுள்ள புதிய பங்குத்தந்தை ஆலயத்திற்கு வந்தார். அவரை உள்ளே விடாமல் பதவி நீக்கம் ஏற்பட்ட பங்கு தந்தையின் ஆதரவாளர்கள் தடுத்து வாக்குவாதம் செய்தனர்.
இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து வடபாகம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் சுமார் அரை மணி நேரம் ஜெப ஆராதனை நடைபெறவில்லை. பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் ஜெப ஆராதனைகள் நடந்தது. இதனால் ஆலயத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வளைகுடா நாடுகளில் போர் பதற்றம்: தமிழக மீனவர்களை மீட்க விஜய் வசந்த் எம்.பி. மனு!
வியாழன் 12, மார்ச் 2026 12:27:28 PM (IST)

பள்ளி தாளாளரிடம் ரூ.10.5 கோடி நில மோசடி: தந்தை, மகன் மீது வழக்குப்பதிவு!
வியாழன் 12, மார்ச் 2026 8:33:05 AM (IST)

வணிக சிலிண்டர் தட்டுப்பாடு: குமரியில் 5,000 உணவகங்கள் மூடும் அபாயம்!
புதன் 11, மார்ச் 2026 8:36:32 PM (IST)

திருமண ஆசை காட்டி நர்ஸ் பாலியல் பலாத்காரம் : 16 லட்சம் மோசடி - மத போதகர் கைது!
செவ்வாய் 10, மார்ச் 2026 8:34:21 AM (IST)

சட்டவிரோதமாக ரயில் முன்பதிவு டிக்கெட் விற்பனை : 5 ஆண்டுகளில் 26 பேர் கைது
செவ்வாய் 10, மார்ச் 2026 8:30:32 AM (IST)

வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து 2 கோடி மோசடி: நகை மதிப்பீட்டாளர் கைது!
செவ்வாய் 10, மார்ச் 2026 8:25:03 AM (IST)


அவுங்கDec 11, 2025 - 12:19:03 PM | Posted IP 162.1*****