» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகம் அருகே தீவிபத்து

வியாழன் 4, டிசம்பர் 2025 4:55:50 PM (IST)

சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகம் படகுகள் தயாரிக்கும் இடத்தில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு அணைத்தனர். 

கன்னியாகுமரி அருகே சின்ன முட்டம் மீன்பிடி துறைமுக பகுதியில், பைபர் படகுகள் தயாரிப்பில் உருவாகும் கழிவுகள் குவிந்து வைக்கப்பட்டிருந்த இடத்தில் இன்று திடீரென தீப்பிடித்து கரும்புகை மண்டலமாக உயர்ந்தது. தகவல் கிடைத்ததும் கன்னியாகுமரி தீயணைப்பு படையினர் விரைந்து வந்து, தீ பரவாமல் உடனடியாக கட்டுப்படுத்தி அணைத்தனர். துரித நடவடிக்கை காரணமாக பெரும் சேதம் மற்றும் விபத்து தவிர்க்கப்பட்டதாக துறைமுகப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory