» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கபாடபுரமும், தென்மதுரையும் இங்கே! குமரிக்கண்டம் எங்கே? பெ.இராஜேஷ் செல்வரதி நூல் வெளியீட்டு விழா
வெள்ளி 6, மார்ச் 2026 8:01:34 AM (IST)

கபாடபுரமும், தென்மதுரையும் இங்கே! குமரிக்கண்டம் எங்கே? என்ற தலைப்பில் தூத்துக்குடியைச் சேர்ந்த வரலாறு மற்றும் தொல்லியல் ஆர்வலர் பெ.இராஜேஷ் செல்வரதியின் நூல் வெளியீட்டு விழா இன்று 06.03.2026 அன்று மதியம் 2:30 மணியளவில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக வளாகத்தின் தொல்லியல்துறை அரங்கத்தில் வைத்து வெளியாக உள்ளது.
இவர் சுமார் மூன்று ஆண்டுகளாக நமது தருவைக்குளம் கிராமத்தின் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஏராளமான தொல்லியல் தொன்மங்களை கண்டெடுத்து மாவட்ட நிர்வாகம் வாயிலாக ஆவணப்படுத்தியதன் அடிப்படையில் நமது இந்திய மற்றும் தமிழக தொல்லியல் துறையினரின் பரிந்துரையின் கீழ் நமது மாநில அரசு 14.03.2025ம் தேதி 2025-26ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் பட்டினமருதூர் பகுதியினை சேர்ந்த சுமார் 300ஏக்கர் பரப்பளவினை தொல்லியல் தளமாக நிதி ஒதுக்கி அறிவித்து நமது தமிழ் சமூகத்திற்கு பெரும் நம்பிக்கையினை கொடுத்தது என்பது நாம் அறிந்ததே.
தொடர்ந்து அப்பகுதியில் முறையான புல நிலவரங்கள் ஆய்வு செய்து, அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்றும், இதன் அடிப்படையில் வெகு விரைவில் தொல்லியல் அகழாய்வுகள் ஆரம்பம் ஆகவுள்ளன என்ற இனிய தகவலோடு, கூடுதலாக தான் இதுவரை பயணித்து கடந்து வந்த அனுபவங்கள், அறிவியல் ஆதாரங்கள், தொன்மையான வரலாற்று சுவடுகள் மற்றும் வரைபடங்கள், இதுவரை மாவட்ட நிர்வாகம் வாயிலாக பதிவு செய்யப்பட்டுள்ள கோரிக்கைகள் குறித்த விபரங்களை ஆவணமாக்கி அதனை நம் தமிழ் சமூகம் குறிப்பாக வரலாறு மற்றும் தொல்லியல் துறை மாணவச் செல்வங்கள் முறையாக அவற்றை பகுப்பாய்வுகள் பல செய்து நமது தமிழர்களின் உண்மையான வரலாற்றினை மீட்டெடுத்திட வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தோடு ஆவணப்படுத்தப்பட்ட தரவுகளுக்கும், தமிழ்களின் நீண்ட கால வரலாற்றின் புதிர்களாக உள்ள நம் கடல் கொண்ட தென்மதுரை மற்றும் கபாடபுரம் ஆகியவற்றிற்கும் உள்ள இணைப்புகளை ஓர் கேள்விகளின் தொகுப்புகளாக புத்தகம் வடிவில் வெளியிட உள்ளார் என்றும்,
மேலும் இந்த தரவுகளை அறிவியல் பூர்வமாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வாயிலாக தானே தொகுத்து அதனை சுமார் 20 நிமிட முன்னோட்ட காணொளியாக நாளது தேதியில் https://youtu.be/rKJpn1_5Hts (Youtube channel - RAJESH SELVARATHI PERIASAMY) என்ற இணைப்பில் வெளியிட உள்ளார் என்றும் தகவல் தெரிவித்தார்.
தனது நூலினை படித்துணர்ந்தும், இந்த காணொளியினை கண்டுணர்ந்தும், நமது வரலாற்றின் புதிர்களை அறிந்து, அவரவர் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து, தமிழர்கள் என்ற ஒற்றைப் பார்வையில் குவிந்து, விரைவில் நம் பாண்டியர்களின் இருண்ட கால வரலாற்று பெருமைகளை தொழில் நுட்பங்களின் தரவுகளோடு நிரூபணம் செய்து இந்த பாருலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டிட முனைந்திட வேண்டும் என்ற தனது கோரிக்கைகளோடு நம் தமிழ் அன்னையின் பாதம் பணிந்து சமர்ப்பிப்பதாக இந்நூலின் ஆசிரியராகவும், பதிப்பாளராகவும் விளங்கிடும் பெ.இராஜேஷ் செல்வரதி தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரயில்கள் சேவையில் மாற்றம் வருமா? பயணிகள் எதிர்பார்ப்பு
சனி 6, ஜூன் 2026 5:52:23 PM (IST)

பிளஸ் 2 மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டு மையம் தொடக்கம்: ஆட்சியர் மு.பிரதாப் தகவல்!
சனி 6, ஜூன் 2026 12:30:28 PM (IST)

மாணவர்கள் சுற்றுச்சூழல் தூதுவர்களாகச் செயல்பட வேண்டும்: ஆட்சியர் மு.பிரதாப் அறிவுறுத்தல்!
வெள்ளி 5, ஜூன் 2026 5:51:36 PM (IST)

ஆசிய டேக்வாண்டோ போட்டியில் தங்கம் வென்று குமரி மாவட்ட மாற்றுத்திறனாளி வீரர் சாதனை!
வியாழன் 4, ஜூன் 2026 12:44:31 PM (IST)

கன்னியாகுமரியில் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு: ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிரடி உத்தரவு!
புதன் 3, ஜூன் 2026 4:48:05 PM (IST)

காப்புக்காட்டில் முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு 'இலக்கியச் செம்மல்' விருது!
புதன் 3, ஜூன் 2026 3:46:39 PM (IST)


