» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.25 லட்சம் மோசடி: வாலிபர் கைது!!

திங்கள் 1, டிசம்பர் 2025 8:51:56 PM (IST)

ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி பட்டதாரி பெண்ணிடம் ரூ.25 லட்சம் மற்றும் நகைகளை வாங்கி ஏமாற்றிய ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.

நாகர்கோவில் அருகே உள்ள திருப்பதிசாரம் கீழூர் பகுதியை சேர்ந்தவர் 32 வயதுடைய பட்டதாரி பெண். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். மேலும் அரசு வேலைக்கு முயற்சி செய்து வருகிறார். இந்நிலையில் பெண்ணின் தந்தைக்கு ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்த பிரபாகரன் (37) என்பவர் அறிமுகமானார். அவர் பெண்ணின் தந்தையிடம், ‘நான் ரயில்வேயில் வேலை செய்து வருகிறேன். எனக்கு உயர் அதிகாரிகள் பலரை தெரியும். 

ரூ.25 லட்சம் கொடுத்தால் உங்கள் மகளுக்கு ரயில்வேயில் வேலை வாங்கி தருகிறேன்’ என ஆசை வார்த்தைகள் கூறினார். இதை நம்பிய பெண்ணின் தந்தை மகளுக்கு வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் பிரபாகரனின் வங்கி கணக்குக்கு பல தவணையாக ரூ.25 லட்சம் அனுப்பினார். ஆனால் மீண்டும் பணம் தேவைப்படுகிறது என்று பிரபாகரன் கேட்டார். இதையடுத்து பெண்ணின் தந்தை 5 பவுன் நகையும் கொடுத்தார். இவ்வாறு பணம், நகை கொடுத்து ஒரு ஆண்டு கடந்த பின்பும் பிரபாகரன் வேலை வாங்கி கொடுக்கவில்லை.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பெண்ணின் தந்தை மாவட்ட எஸ்பி ஸ்டாலிடம் புகார் கொடுத்தார். இந்த மோசடி குறித்து விசாரணை நடத்த எஸ்பி ஆரவாய்மொழி போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையில் போலீசார் தனிப்படை அமைத்து பிரபாகரனை தேடி வந்தனர். இந்தநிலையில் அரக்கோணத்தில் பதுங்கி இருந்த பிரபாகரனை கைது செய்து ஆரல்வாய்மொழிக்கு அழைத்து வந்தனர்.

அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல தகவல்கள் தெரிய வந்தது. அதாவது ஒரு ஆண்டுக்கு முன்பு பட்டதாரி பெண்ணின் சகோதரர் அரக்கோணம் பகுதியில் வழிதெரியாமல் சுற்றி திரிந்துள்ளார். அவரை பிரபாகரன் மீட்டு பெண்ணின் தந்தையிடம் ஒப்படைத்துள்ளார். இதன்மூலம்தான் இவர்கள் இடையே பழக்கம் ஏற்பட்டது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் பிரபாகரனின் செல்போனை வாங்கி ஆய்வு செய்த போது அதில் பல பெண்களின் ஆபாச படங்கள், வீடியோக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இவர் வேலை வாங்கி தருவதாக பல இளம்பெண்களை வரவழைத்து ஏமாற்றி அவர்களுடன் உல்லாசமாக இருந்து வீடியோ எடுத்ததாக போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory