» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நிதி நிறுவனத்தில் போலி ரசீது வழங்கி ரூ.46 லட்சம் கையாடல்: பெண் மேலாளர் சிக்கினார்

திங்கள் 1, டிசம்பர் 2025 8:46:21 PM (IST)

தேங்காப்பட்டணத்தில் தனியார் நிதி நிறுவனத்தில் போலி ரசீது வழங்கி ரூ.46 லட்சம் மோசடி செய்த பெண் மேலாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குமரி மாவட்டம் தேங்காப்பட்டணத்தில் ஒரு தனியார் நிதி நிறுவனம் உள்ளது. இதில் காஞ்சிரவிளையை சேர்ந்த பிந்து (வயது 46) என்பவர் கிளை மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிதி நிறுவனத்தில் சுற்றுவட்டாரத்தில் உள்ள பொதுமக்கள் நகைகளை அடகு வைத்து கடன் பெற்று வருகிறார்கள்.

இந்தநிலையில் மண்டல மேலாளரான அருமனையை சேர்ந்த ஜெகன் டார்வின் (35) என்பவர் அந்த நிதி நிறுவனத்தில் ஆய்வு செய்தார். அப்போது கிளை மேலாளர் பிந்து, நகையை அடகு வைத்த வாடிக்கையாளர்களுக்கு போலி ரசீது வழங்கி ரூ.46 லட்சத்து 8 ஆயிரத்து 938-ஐ கையாடல் செய்திருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து மண்டல மேலாளர் ஜெகன் டார்வின் புதுக்கடை போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் பிந்து மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் நிதிநிறுவனத்தில் போலி ரசீது வழங்கி ரூ.46 லட்சம் கையாடல் செய்யப்பட்ட சம்பவம் வாடிக்கையாளர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory