» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தமிழ் வழியில் பயின்று அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு காமராஜர் விருது!

செவ்வாய் 25, நவம்பர் 2025 12:26:17 PM (IST)



கன்னியாகுமரி மாவட்டத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தமிழ் வழியில் பயின்று அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு காமராஜர் விருது மற்றும் காசோலையினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, வழங்கி பாராட்டினார்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக குறள் கூட்டரங்கில் பள்ளிகல்வித்துறை சார்பில் 10 மற்றும் 12ம் வகுப்பில் தமிழ்வழியில் பயின்று அதிக மதிப்பெண் எடுத்த மாணவியர்களுக்கு காமராஜர் விருது வழங்கி தெரிவிக்கையில்- கடந்த 2023- 2024 ஆம் கல்வி ஆண்டில் தமிழ் வழியில் பயின்று முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களில் கல்விசார் செயல்பாடுகளில் சிறந்து விளங்கிய மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு சிறந்த மாணவர்களுக்கான காமராஜர் விருது இன்று வழங்கப்பட்டது. 

நமது கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயின்ற பதினைந்து மாணவர்களுக்கு சான்றிதழும், தலா ரூ.10,000 காசோலையும் வழங்கப்பட்டன. தொடர்ந்து பன்னிரண்டாம் வகுப்பு பயின்ற சிறந்த மாணவர்களாக தெரிவு செய்யப்பட்ட 15 மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழும் ரூ.20,000 காசோலையும் வழங்கப்பட்டன. சிறந்த மாணவர் விருது பெற்ற மாணவர்களை வாழ்த்துக்கிறேன். இன்னும் உயரிய விருதுகளை பெற வேண்டும் என ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்தார். 

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கிய ராஜ், மாவட்ட கல்வி அலுவலர், துறை அலுவலர்கள், மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory