» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
ரியல் எஸ்டேட் தொழிலதிபரிடம் பணம் இரட்டிப்பு மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது
வெள்ளி 7, நவம்பர் 2025 4:56:19 PM (IST)
நாகர்கோவிலில் ரியல் எஸ்டேட் தொழிலதிபரிடம் பணம் இரட்டிப்பு மோசடியில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கேரள மாநிலம், திருவனந்தபுரம், மீனம்குளம் பகுதியைச் சேர்ந்தவர் அகஸ்டின் ஜான் (55). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரிடம் பணம் முதலீடு செய்தால் இரட்டிப்பாக தருவதாக கேரள மாநிலத்தைச் சேர்ந்த சிலர் கூறினர். இதை நம்பிய அகஸ்டின்ஜான், நாகர்கோவிலில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் வைத்து ரூ. 35 லட்சம், ரூ.15 லட்சத்துக்கு காசோலைகளை அளித்தார்.
இந்த பணத்துக்கு ரூ. 1 கோடியாக திருப்பி தருவதாக அவர்கள் கூறினர். ஆனால், அவர்கள் கூறியபடி பணத்தைத் திருப்பித் தரவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அகஸ்டின்ஜான் இதுகுறித்து நாகர்கோவில், வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்து விசாரித்த போலீசார் அகஸ்டின்ஜானிடம் பணம் வாங்கி ஏமாற்றியது, கேரள மாநிலம் ஆற்றிங்கால் பகுதியைச் சேர்ந்த மோகனன் (65), குமரி மாவட்டம், களியக்காவிளை அருகே உள்ள மேல்பாலையைச் சேர்ந்த சுந்தர்ராஜ், பந்தளத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (65) என்பது தெரியவந்தது. வடசேரி காவல் நிலைய போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவில் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் தீவிர சோதனை
வியாழன் 8, ஜனவரி 2026 3:37:10 PM (IST)

குமரி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3000 வழங்கும் திட்டம் துவக்கம்
வியாழன் 8, ஜனவரி 2026 12:54:42 PM (IST)

நாகர்கோவில் சந்திப்பில் ரயில் சேவை மாற்றம் : குமரியில் இருந்து ரயில்கள் இயக்கம்!
புதன் 7, ஜனவரி 2026 4:37:07 PM (IST)

சான்றிதழ் வாங்கி வந்த இளைஞர்கள் பஸ் மோதி உயிரிழப்பு - குமரியில் சோகம்!
புதன் 7, ஜனவரி 2026 11:12:54 AM (IST)

தக்கலையில் 8ஆம் தேதி நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்: ஆட்சியர் ஆய்வு
செவ்வாய் 6, ஜனவரி 2026 5:30:33 PM (IST)

கோதையாற்றில் மீண்டும் தென்பட்ட முதலை: திற்பரப்பு அருகே பரபரப்பு !
செவ்வாய் 6, ஜனவரி 2026 4:41:22 PM (IST)

