» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தாம்பரம் - நாகர்கோவில் உள்ளிட்ட 5 ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு!
திங்கள் 27, அக்டோபர் 2025 4:59:11 PM (IST)
தாம்பரம் - நாகர்கோவில் உள்ளிட்ட 5 ரயிகளில் பயணிகளின் வசதிக்காக கூடுதலாக 6 பெட்டிகள் இணைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தாம்பரம் - செங்கோட்டை (வண்டி எண்: 20681/20682) செல்லும் சிலம்பு அதிவேக எக்ஸ்பிரல் ரயிலில் கூடுதலாக 6 பெட்டிகள் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நவம்பர் 1ம் தேதி முதல் ஏப்ரல் 29 வரையிலும், செங்கல்பட்டில் இருந்து நவம்பர் 2 முதல் ஏப்ரல் 30 வரையிலும் கூடுதல் பெட்டிகளுடன் ரயில் இயக்கப்பட்டும்.
தாம்பரம் - நாகர்கோவில் (வண்டி எண்: 22657/22658) செல்லும் எக்ஸ்பிரல் ரயிலில் கூடுதலாக 6 பெட்டிகள் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நவம்பர் 2ம் தேதி முதல் ஏப்ரல் 29 வரையிலும், நாகர்கோவிலில் இருந்து நவம்பர் 3 முதல் ஏப்ரல் 30 வரையிலும் கூடுதல் பெட்டிகளுடன் ரயில் இயக்கப்பட்டும்.
சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் (வண்டி எண்: 12695/12696) செல்லும் எக்ஸ்பிரல் ரயிலில் கூடுதலாக 6 பெட்டிகள் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நவம்பர் 3ம் தேதி முதல் ஏப்ரல் 29 வரையிலும், திருவனந்தபுரத்தில் இருந்து நவம்பர் 4 முதல் ஏப்ரல் 30 வரையிலும் கூடுதல் பெட்டிகளுடன் ரயில் இயக்கப்பட்டும்.
சென்னை சென்ட்ரல் - ஆலப்புழா (வண்டி எண்: 22639/22640) செல்லும் எக்ஸ்பிரல் ரயிலில் கூடுதலாக 6 பெட்டிகள் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நவம்பர் 1ம் தேதி முதல் ஏப்ரல் 27 வரையிலும், ஆலப்புழாவில் இருந்து நவம்பர் 2 முதல் ஏப்ரல் 28 வரையிலும் கூடுதல் பெட்டிகளுடன் ரயில் இயக்கப்பட்டும்.
கோயம்புத்தூர் - ராமேஸ்வரம் (வண்டி எண்: 16618/16617) செல்லும் எக்ஸ்பிரல் ரயிலில் கூடுதலாக 6 பெட்டிகள் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நவம்பர் 4ம் தேதி முதல் ஏப்ரல் 28 வரையிலும், ராமேஸ்வரத்தில் இருந்து நவம்பர் 5 முதல் ஏப்ரல் 29 வரையிலும் கூடுதல் பெட்டிகளுடன் ரயில் இயக்கப்பட்டும்.
கூடுதல் பெட்டிகளின் அமைப்பு: 1 - ஏசி இரண்டாம் வகுப்பு பெட்டி, 2 - ஏசி மூன்றாம் வகுப்பு பெட்டி, 3 - ஸ்லீப்பர் வகுப்பு பெட்டி, 1 - பொது வகுப்பு பெட்டி
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு பேரணி
புதன் 4, பிப்ரவரி 2026 1:22:15 PM (IST)

முதல்வர் மு.க. ஸ்டாலின் 19ம் தேதி குமரி வருகை : அரசு விழாவில் பங்கேற்கிறார்!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 12:15:42 PM (IST)

நாகர்கோவில் மார்டன் பள்ளியில் விதைப்பந்து விழிப்புணர்வு
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 10:49:12 AM (IST)

விளவங்கோடு அருகே குளத்தில் ஆண் சடலம் மீட்பு!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 10:47:38 AM (IST)

திருவனந்தபுரம் - நாகர்கோவில் மூன்றாவது ரயில் பாதை : பட்ஜெட்டில் அறிவிக்கப்படுமா?
சனி 31, ஜனவரி 2026 12:07:03 PM (IST)

மின் இணைப்பு கேட்டபெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த அதிகாரி பணியிடை நீக்கம்!
சனி 31, ஜனவரி 2026 11:16:03 AM (IST)

