» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி வகுப்புகள்: ஆட்சியர் தகவல்!
திங்கள் 27, அக்டோபர் 2025 4:38:41 PM (IST)
குமரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், மத்திய மற்றும் மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்படும் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
மத்திய மற்றும் மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்படும் போட்டித்தேர்வுகளுக்கு மாணவர்களை தொடர்ச்சியாக தயார்படுத்தும் வகையில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், நாகர்கோவிலில் வைத்து இலவச பயிற்சி வகுப்புகள் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.00 மணி முதல் 01.00 மணி வரை நடைபெற்றுவருகிறது.
இந்த இலவச பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் மாணவர்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ஆதார் அட்டை நகல் ஆகிய ஆவணங்களுடன் நாகர்கோவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரடியாக வருகை புரிந்து தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இப்பயிற்சி வகுப்புகள் அனுபவம் வாய்ந்த பயிற்றுனர்களை கொண்டும், SMART BOARD வகுப்புகள் மூலமும் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்பவர்களுக்கு பாடக்குறிப்புகள் (Study Material) இலவசமாக வழங்கப்படும். இத்தேர்விற்கு மாணவர்களை தயார் செய்யும் பொருட்டு பாடவாரியாக 25 மாதிரித்தேர்வுகள் நடத்தத்திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இணையதளமான https://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் அனைத்து விதமான போட்டித் தேர்வுகளுக்கான பாடக்குறிப்புகள் மற்றும் இணையதள மாதிரி தேர்வுகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு பேரணி
புதன் 4, பிப்ரவரி 2026 1:22:15 PM (IST)

முதல்வர் மு.க. ஸ்டாலின் 19ம் தேதி குமரி வருகை : அரசு விழாவில் பங்கேற்கிறார்!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 12:15:42 PM (IST)

நாகர்கோவில் மார்டன் பள்ளியில் விதைப்பந்து விழிப்புணர்வு
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 10:49:12 AM (IST)

விளவங்கோடு அருகே குளத்தில் ஆண் சடலம் மீட்பு!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 10:47:38 AM (IST)

திருவனந்தபுரம் - நாகர்கோவில் மூன்றாவது ரயில் பாதை : பட்ஜெட்டில் அறிவிக்கப்படுமா?
சனி 31, ஜனவரி 2026 12:07:03 PM (IST)

மின் இணைப்பு கேட்டபெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த அதிகாரி பணியிடை நீக்கம்!
சனி 31, ஜனவரி 2026 11:16:03 AM (IST)

