» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
லஞ்சம் வாங்கிய ஆய்வாளர் கைது எதிரொலி: அதிரடி நடவடிக்கையில் இறங்கிய குமரி எஸ்பி!
சனி 25, அக்டோபர் 2025 8:50:44 PM (IST)
நேசமணி நகர் காவல் நிலைய ஆய்வாளர் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டது எதிரொலியாக கன்னியாகுமரி மாவட்ட காவல் துறையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் ஸ்டாலின் அவர்கள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக தக்கலை, குளச்சல், இரணியல், ஆகிய காவல் நிலைய காவல் ஆய்வாளர்கள் மற்றும் 8 உதவி காவல் ஆய்வாளர்கள் வேறு மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் . மேலும் தக்கலை, குளச்சல், நேசமணி நகர், அஞ்சுகிராமம், ஆசாரிபள்ளம் உட்பட 12 காவல் நிலைய தனிப்பிரிவு போலீசார் தனிப்பிரிவிலிருந்து மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் நேசமணி நகர் காவல் நிலைய காவலர் சதீஷ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இந்த அதிரடி நடவடிக்கை குமரி மாவட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் லஞ்சம் வாங்கும் போலீசாரை இனம் கண்டு அவர்களை களை எடுக்கும் பணி தொடரும் என்பதோடு அவர்கள் மீது பணியிடை நீக்கம் உட்பட கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்து உள்ளது போலீசாரின் சட்டவிரோத செயல்பாடுகளுக்கு முழுவதும் தடை விதிப்பதாகவே உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் நேர்மையாக பணியாற்றும் போலீசார் மட்டுமே குமரி மாவட்டத்தில் தனக்கு கீழ் பணியாற்ற முடியும் என்ற நிலையை உருவாக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளது மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் அதிரடி நடவடிக்கைக்கு ஊக்கமளிப்பதாகவே உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு பேரணி
புதன் 4, பிப்ரவரி 2026 1:22:15 PM (IST)

முதல்வர் மு.க. ஸ்டாலின் 19ம் தேதி குமரி வருகை : அரசு விழாவில் பங்கேற்கிறார்!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 12:15:42 PM (IST)

நாகர்கோவில் மார்டன் பள்ளியில் விதைப்பந்து விழிப்புணர்வு
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 10:49:12 AM (IST)

விளவங்கோடு அருகே குளத்தில் ஆண் சடலம் மீட்பு!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 10:47:38 AM (IST)

திருவனந்தபுரம் - நாகர்கோவில் மூன்றாவது ரயில் பாதை : பட்ஜெட்டில் அறிவிக்கப்படுமா?
சனி 31, ஜனவரி 2026 12:07:03 PM (IST)

மின் இணைப்பு கேட்டபெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த அதிகாரி பணியிடை நீக்கம்!
சனி 31, ஜனவரி 2026 11:16:03 AM (IST)

