» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழப்பு: நெல்லையில் பரிதாபம்!

சனி 18, அக்டோபர் 2025 5:25:48 PM (IST)

நெல்லை மேலப்பாளையத்தில் கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 70 வயது மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் குறிச்சி பாண்டியாபுரம் பகுதியில் நேற்று இரவு கனமழை பெய்த போது வீட்டின் சுவர் இடிந்து விழுந்து உள்ளே படுத்திருந்த மாடத்தி அம்மாள் (70) என்ற மூதாட்டி படுகாயமடைந்தார். அவரை மீட்ட அக்கம்பத்தினர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மூதாட்டி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory