» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குடியிருப்பு பகுதிக்கு வந்த மலைப்பாம்பு : பத்திரமாக மீட்ட வனத்துறையினர்!
வியாழன் 16, அக்டோபர் 2025 8:07:39 PM (IST)

தாழக்குடி அருகே கோழியை பிடிப்பதற்காக குடியிருப்பு அருகில் வந்த 7 அடி நீள மலைப்பாம்பை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டம் தாழக்குடி பேரூராட்சிகுட்பட்ட 1-வது வார்டு சீதப்பால் பகுதியில் கேபிள் டிவி நடத்தி வரும் ராஜேஷ் என்பவர் வீட்டின் அருகில் உள்ள தோப்பில் வாத்து கோழிகள் இறை தேடி வருகின்றன அதனை பிடிப்பதற்காக வந்த சுமார் 7 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு அதன் அருகில் உள்ள வலையில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது
இதனைப் பார்த்த ராஜேஷ் தாழக்குடி பேரூராட்சி முன்னாள் தலைவரும் கவுன்சிலர் ரோகினிஅய்யப்பன் அவர்களுக்கு தகவல் கொடுத்தார் அவர் மாவட்ட வன அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார் அதன் அடிப்படையில் பூதப்பாண்டி வனச்சரகர் அன்பழகன் உத்தரவின் பேரில் வேட்டை தடுப்பு காவலர் அந்தோணிராஜன் விரைந்து வந்து வலையில் சிக்கிய மலைப்பாம்பினை பத்திரமாக பிடித்து அடர்ந்த காட்டுப் பகுதியில் கொண்டு விட்டனர் இதனால் வீட்டில் உள்ளவர்கள் நிம்மதி அடைந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த தெலுங்கானா தம்பதியர் விபத்தில் மரணம்
சனி 17, ஜனவரி 2026 5:23:06 PM (IST)

உடையார்விளையில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் : முன்னாள் அமைச்சர் பச்சைமால் மரியாதை
சனி 17, ஜனவரி 2026 3:19:54 PM (IST)

பாறையில் தலை சிக்கி இளைஞர் உயிரிழப்பு: திற்பரப்பு படகு பகுதியில் சோகம்!
சனி 17, ஜனவரி 2026 12:39:45 PM (IST)

ரங்காபானி-நாகர்கோவில் இடையே வந்தே பாரத் ரயில்: இன்று முதல் தொடக்கம்!
சனி 17, ஜனவரி 2026 10:58:13 AM (IST)

பட்ஜெட்டில் கிழக்கு கடற்கரை ரயில் பாதை திட்டம் அறிவிக்கப்படுமா? பயணிகள் எதிர்பார்ப்பு
சனி 17, ஜனவரி 2026 10:32:11 AM (IST)

அதிமுக சார்பில் புதுமண தம்பதிகளுக்கு பொங்கல் சீர் வரிசைகள் வழங்கும் நிகழ்ச்சி!
புதன் 14, ஜனவரி 2026 12:53:02 PM (IST)

