» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கடல்போல் காட்சியளிக்கும் தருவை மைதானம் : விளையாட்டு பயிற்சிகள் ரத்து

வியாழன் 16, அக்டோபர் 2025 3:15:56 PM (IST)



தூத்துக்குடியில் பெய்த கன மழையால் மாவட்ட விளையாட்டு மைதானம் தண்ணீர் தேங்கி கடல் போல் காட்சி அளிக்கிறது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் 2 நாட்கள் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் தூத்துக்குடியில் நேற்று மாலை முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. பின்னர், நள்ளிரவு தொடங்கி அதிகாலை வரை மழை வெளுத்து வாங்கியது.

தூத்துக்குடியில் கன மழையால் மாவட்ட விளையாட்டு மைதானம் தண்ணீர் தேங்கி கடல் போல் காட்சி அளிக்கிறது. மேலும், கால்பந்து மைதானம், கைப்பந்து மைதானம், கூடைப்பந்து மைதானம் அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளது. இதனால் விளையாட்டு பயிற்சிகள் எதுவும் நடைபெறவில்லை. மேலும், நடைபயிற்சிக்கு மக்களை அனுமதிக்கவில்லை. மாநகராட்சி நிர்வாகம் தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து

ஆமாOct 17, 2025 - 02:01:11 PM | Posted IP 104.2*****

மாநராட்சி சாக்கடை பயலுக தான் எல்லா இடத்திலும் கால்வாயை உயரமாக அமைப்பார்களாம் , அதான் ஒவொரு தெருக்களில் தண்ணீர் வெளியேறாமல் தேங்கி இருக்கிறது ..

அன்புOct 16, 2025 - 05:37:01 PM | Posted IP 172.7*****

இந்த விளையாட்டு மைதானத்தை சுற்றி பெரிய வடிகால் இருக்கிறது ஆனால் அதன் மட்டம் இதைவிட உயர்வாக இருப்பதால் தண்ணீர் வெளியேற முடியாமல் இருக்கின்றது விளையாட்டு மைதானத்தை தான் உயர்த்த வேண்டும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory