» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

லாரியின் கீழே படுத்து தூங்கிய வாலிபர் பரிதாப சாவு - தூத்துக்குடியில் சோகம்!

வியாழன் 16, அக்டோபர் 2025 11:02:34 AM (IST)

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் லாரியின் கீழே படுத்து தூங்கிய வாலிபர், லாரியை டிரைவர் எடுத்ததால் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். 

தூத்துக்குடி தாளமுத்து நகர் கீழ அழகாபுரியைச் சேர்ந்தவர் பரமசிவம் மகன் முத்து சுகுமார் (24) கொத்தனார். மேலும், மீன்பிடி துறைமுகத்தில் லோடுமேனாக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு இவர் மீன்பிடி துறைமுகத்தில் ஒரு லாரியின் கீழே படுத்து உறங்கினாராம். இதையறியமால் நள்ளிரவு 12 மணி அளவில் அந்த லாரியை டிரைவர் எடுத்துள்ளார்.

அப்போது லாரியின் அடியில் தூங்கி கொண்டிருந்த முத்து சுகுமார் மேல் லாரி டயர் ஏறி இறங்கியதில் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த தூத்துக்குடி தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று கிரேன் மூலம் லாரியை தூக்கி முத்து சுகுமாரின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

இந்த சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் குளத்தூர் அருகே உள்ள கச்சிலாபுரம் ராமர் மகன் ராஜசேகர் வயது 45 என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். விபத்தில் இறந்த முத்து சுமாருக்கு திருமணம் ஆகவில்லை. தாயார் முத்தம்மாள் மற்றும் 2 சகோதரிகள் உள்ளனர். அவரது மரணம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. 


மக்கள் கருத்து

KingOct 18, 2025 - 01:05:53 AM | Posted IP 104.2*****

அவர் தூங்கலாம் இல்ல reverse பாத்தாரு வண்டி இடிச்சு உள்ள விலுந்துட்டாரு

KingOct 18, 2025 - 01:01:01 AM | Posted IP 104.2*****

என்னமா பொய் சொல்ரிங்கடா இது நடந்தது DBGT உள்ள நியூ habour DBGT கன்டெய்னர் யார்ட் உள்ள நாங்க அங்கதா இருந்தோம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory