» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
அரசு மருத்துவக் கல்லூரியில் சான்றிதழ் பயிற்சி : நேரடி மாணவர் சேர்க்கை
வெள்ளி 19, செப்டம்பர் 2025 4:35:40 PM (IST)
கன்னியாகுமரி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரியில் ஒரு வருடத்திற்கான சான்றிதழ் பயிற்சிக்கான மாவட்ட அளவிலான நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.
கன்னியாகுமரி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரியில் 2025-2026-ஆம் கல்வியாண்டிற்கான மருத்துவம் சார்ந்த சான்றிதழ் பாடப் பிரிவுகளில் ஒரு வருடத்திற்கான சான்றிதழ் பயிற்சிக்கான மாவட்ட அளவிலான நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.
எனவே தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து 22.09.2025 முதல் 30.09.2025 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 138 இடங்கள் காலியாக உள்ளன. காலியிடங்கள் தொடர்பான விவரங்கள் www.kgmc.ac.in வலைதளத்திலும், கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியின் அறிவிப்புப் பலகையிலும் கிடைக்கப்பெறும்.
1. Emergency care Technician -11 இடங்கள் BC-2, BCM -2, MBC/DNC – 4, SC-2, SCA-1
2. Respiratory Therapy Technician- 14 இடங்கள் OC-3, BC-4, BCM-1, MBC/DNC-4, SC-1, SCA-1
3. Anaesthesia Technician- 6 இடங்கள் BCM-1, MBC/DNC-5
4. Theatre Technician – 28 இடங்கள் BC-9, BCM-1, MBC/DNC-9, SC-7, SCA-2
5. Dialysis Technician 2 இடங்கள் BC-1, SC-1
6. Orthopaedic Technician- 35, இடங்கள் OC-10, BC-10, BCM-1, MBC/DNC-7, SC-5, SCA-1, ST-1
7. Multipurpose Hospital worker - 42, இடங்கள் OC-10, BC-12, BCM-2, MBC/DNC-10, SC-6, SCA-1, ST-1
(i) 31.12.2025 அன்று விண்ணப்பதாரர் 17 வயதை நிறைவு செய்திருக்க வேண்டும். அதிக பட்ச வயது உச்ச வரம்பு இல்லை.
(ii) மருத்துவம் சார்ந்த சான்றிதழ் படிப்புக்கு 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (தேர்வுக்குழு பரிந்துரையின்படி) பல்வகை மருத்துவப்பணியாளர் படிப்புக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
(iii) இட ஒதுக்கீடு: சேர்க்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கான 5% இடஒதுக்கீடு உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் இடஒதுக்கீட்டு நடைமுறை பின்பற்றப்படும்.
விண்ணப்ப்படிவங்கள் கன்னியாகுமரி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மற்றும் துணை முதல்வர் அலுவலகத்தில் கட்டணமின்றி வழங்கப்படும். நிரப்ப பட்ட விண்ணப்பங்கள் மற்றும் அனைத்து அசல் சான்றிதழ்களையும் 22.09.2025 முதல் 30.09.2025 வரை கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி ஆசாரிப்பள்ளத்தில் நேரடி சேர்க்கையின் போது சமர்பித்து கலந்துக்கொள்ளலாம். வகுப்புகள் தொடங்கும் நாள் 06.10.2025. மொத்த பயிற்சி கட்டணம் ரூ.1450/-
தேவைப்படும் ஆவணங்கள் மேனிலைப்பள்ளி மற்றும் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்று சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் (பொருந்துமாயின்), சாதிச் சான்றிதழ், வயதுச் சான்று (பிறப்புச் சான்றிதழ் / பள்ளிச் சான்றிதழ்), மாவட்ட மருத்துவ வாரியத்திடமிருந்து மாற்றுத்திறனாளி சான்றிதழ் (பொருந்துமாயின்), ஆதார் அட்டை அல்லது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை.
தெரிவு செய்யும் நடைமுறை பரிந்துரைக்கப்பட்ட விதிகளின்படி முற்றிலும் தகுதி மற்றும் வகுப்புவாரி இடஒதுக்கீட்டின் அடிப்படையில் அமையும்: நேரடி மாணவர் சேர்க்கை போது ஒதுக்கீடு ஆணைகள் அந்த இடத்திலேயே வழங்கப்படும்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்ட ஆட்சியரை கண்டித்து கிராம நிர்வாக அதிகாரிகள் போராட்டம்!
செவ்வாய் 25, நவம்பர் 2025 5:23:14 PM (IST)

தமிழ் வழியில் பயின்று அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு காமராஜர் விருது!
செவ்வாய் 25, நவம்பர் 2025 12:26:17 PM (IST)

நியாய விலை கடைகளுக்கு புதிய எந்திரங்கள் : ஆட்சியர் ஆர்.அழகுமீனா வழங்கினார்!
திங்கள் 24, நவம்பர் 2025 5:01:54 PM (IST)

முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு ஆன்மிகச் சுடர் விருது: பாலபிரஜாதிபதி அடிகளார் வழங்கினார்
திங்கள் 24, நவம்பர் 2025 3:25:54 PM (IST)

நுள்ளிவிளை ரயில்வே பாலம் இடிக்கும் பணி நிறுத்திவைப்பு: விஜய் வசந்த் எம்.பி. தகவல்
சனி 22, நவம்பர் 2025 12:02:54 PM (IST)

லஞ்சப் புகாரில் சிக்கிய காவல் ஆய்வாளர் அதிரடி இடமாற்றம்: நெல்லை சரக டி.ஐ.ஜி. உத்தரவு!
சனி 22, நவம்பர் 2025 11:27:57 AM (IST)


.gif)