» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
டாக்டர் வீட்டில் 6 பவுன் நகை திருட்டு: பணிப்பெண், சகோதரியுடன் கைது!
திங்கள் 8, செப்டம்பர் 2025 5:36:13 PM (IST)
நாகர்கோவில் அருகே டாக்டர் வீட்டில் 6 பவுன் நகை திருடிய வழக்கில் அக்காள், தங்கையை போலீசார் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தம்மத்துக்கோணம் குருகுலம்சாலை என்ற பகுதி இருக்கிறது. இந்த ஊரைச் சேர்ந்த 45 வயதாகும் பகவத், நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டாக்டராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவியின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லை. இதனால் டாக்டரின் வீட்டில் அவர் இருந்து வருகிறார்.
அவரை உடனிருந்து பராமரிக்க மார்த்தாண்டம் அருகே உள்ள உண்ணாமலை கடையை சேர்ந்த சுசீலா (54) என்பவரை வேலைக்கு சேர்த்துள்ளார். சுசீலா தினமும் காலையில் டாக்டரின் வீட்டுக்கு வந்து அவரது மாமியாருக்கு தேவையான பணிவிடைகளை செய்துவிட்டு மாலையில் வீடு திரும்பி வந்துள்ளார். அதன்படி நேற்று முன்தினம் காலையில் சுசீலா வேலைக்கு வந்து விட்டு மாலையில் தனது வீட்டுக்கு திரும்பியிருக்கிறார்.
ஆனால் அவர் சென்ற பின்பு இரவு 7 மணிக்கு டாக்டர் பகவத்தின் மனைவி, தனது தாயாருக்கு உணவு கொடுப்பதற்காக சென்றுள்ளார் அப்போது தாயார் கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்க சங்கிலி மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.. தொடர்ந்து நகையை வீடு முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் நகையை வேலைக்காரி சுசீலா திருடி சென்றிருக்கலாம் என சந்தேகம் அவருக்கு எழுந்தது.
மேலும் தனது கணவர் டாக்டர் பகவத்திடம் கூறினார். பிறகு ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் பகவத் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார், சுசீலாவின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் தங்க சங்கிலியை திருடியதை ஒப்புக் கொண்டிருக்கிறார். அத்துடன் நகையை தனது தங்கை மீனச்சல் பகுதியை சேர்ந்த சாந்தி (51) என்பவரிடம் கொடுத்துள்ளதாக கூறியிருக்கிறார்,
உடனே போலீசார் மீனச்சலில் உள்ள சாந்தியின் வீட்டுக்கு சென்று அவரிடம் இருந்து நகையை மீட்டனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடிய சுசீலா மற்றும் தங்கை சாந்தி ஆகியோரை கைது செய்தனர். வேலை பார்த்த டாக்டர் வீட்டிலேயே நகையை பெண் திருடிய சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நியாய விலை கடைகளுக்கு புதிய எந்திரங்கள் : ஆட்சியர் ஆர்.அழகுமீனா வழங்கினார்!
திங்கள் 24, நவம்பர் 2025 5:01:54 PM (IST)

முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு ஆன்மிகச் சுடர் விருது: பாலபிரஜாதிபதி அடிகளார் வழங்கினார்
திங்கள் 24, நவம்பர் 2025 3:25:54 PM (IST)

நுள்ளிவிளை ரயில்வே பாலம் இடிக்கும் பணி நிறுத்திவைப்பு: விஜய் வசந்த் எம்.பி. தகவல்
சனி 22, நவம்பர் 2025 12:02:54 PM (IST)

லஞ்சப் புகாரில் சிக்கிய காவல் ஆய்வாளர் அதிரடி இடமாற்றம்: நெல்லை சரக டி.ஐ.ஜி. உத்தரவு!
சனி 22, நவம்பர் 2025 11:27:57 AM (IST)

குமரி மாவட்ட வாக்காளர்களுக்கு இறுதிவாய்ப்பு : ஆட்சியர் ஆர்.அழகுமீனா அறிவிப்பு
வெள்ளி 21, நவம்பர் 2025 3:30:38 PM (IST)

உலக மீனவர் தினம்: கடல் ஆம்புலன்ஸ் திட்டத்தை நடைமுறைபடுத்த மீனவர்கள் கோரிக்கை!
வெள்ளி 21, நவம்பர் 2025 12:36:39 PM (IST)


.gif)