» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் திடீர் விரிசல்: சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி!
திங்கள் 8, செப்டம்பர் 2025 4:21:46 PM (IST)

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் திடீர் விரிசல் ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்தனர்.
உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அங்குள்ள விவேகானந்தர் பாறையிலிருந்து திருவள்ளுவர் சிலையினை இணைக்கும் வகையில் ரூ.37 கோடி மதிப்பில் கண்ணாடி இழை பாலம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டது.
இதை கடந்த டிசம்பர் 30ந் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதை தொடர்ந்து கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள், திருவள்ளுவர் சிலையினை கண்டுகளிப்பதோடு, கண்ணாடி இழை பாலம் வாயிலாக நடந்து சென்று கடலின் அழகினை கண்டு மகிழ்ச்சி அடைகின்றனர். அத்துடன், கண்ணாடி இழை பாலத்தில் நடந்து சென்று செல்பி எடுப்பதில் சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், கண்ணாடி பாலத்தில் ஒரு இடத்தில் மட்டும் விரிசல் அடைந்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்தனர். இதனை தொடர்ந்து, கண்ணாடி பாலத்தில் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது, விரிசல் அடைந்துள்ள கண்ணாடியை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இரத்த தானம் செய்ய அனைவரும் முன்வர வேண்டும் : ஆட்சியர் ஆர்.அழகுமீனா வேண்டுகோள்
வெள்ளி 10, அக்டோபர் 2025 3:59:36 PM (IST)

திருவட்டாறு கோவில் நகை திருட்டு வழக்கில் மேல் முறையீடு செய்தவர்கள் விடுதலை!
வெள்ளி 10, அக்டோபர் 2025 12:52:50 PM (IST)

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் 9277 மனுக்களுக்கு தீர்வு: ஆட்சியர் தகவல்
வியாழன் 9, அக்டோபர் 2025 5:18:19 PM (IST)

குமரியில் 102 ஆண்டுகளுக்குப் பின் பூத்து குலுங்கும் பனை மரம் : பொதுமக்கள் வியப்பு
வியாழன் 9, அக்டோபர் 2025 10:05:24 AM (IST)

ஒரே நாளில் 8 சரித்திர பதிவேடு ரவுடிகள் கைது : குமரி மாவட்ட போலீஸ் அதிரடி!
புதன் 8, அக்டோபர் 2025 11:22:05 AM (IST)

திருடச் சென்ற வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷம் - வாலிபர் கைது!
செவ்வாய் 7, அக்டோபர் 2025 12:48:02 PM (IST)
