» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
அரசு மேல்நிலைப்பள்ளிகளில் ஆட்சியர் ஆய்வு
புதன் 20, ஆகஸ்ட் 2025 4:03:48 PM (IST)

இரணியல் மற்றும் கருங்கல் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு மேற்கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் மற்றும் கருங்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவர்களின் கற்றல் திறன் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, மாணவ மாணவியர்களை நேரில் சந்தித்து, கலந்துரையாடி, தெரிவிக்கையில்- கன்னியாகுமரி மாவட்ட மாணவ மாணவர்களின் கல்வி அடைவினை மேம்படுத்துவதற்காக பல்வேறு முன்னெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்தவகையில் இன்று இரணியல் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 12ம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்களிடம் கலந்துரையாடி, அவர்களின் எதிர்கால குறிக்கோள்கள் குறித்து கேட்டறியப்பட்டது. தொடர்ந்து மாணவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் குறித்து ஆசியர்களிடம் கேட்டறியப்பட்டது. மாணவர்களிடம் பாடங்களில் ஏற்படும் ஐயங்களை உடனுக்குடன் ஆசிரியர்களை அணுகி நிவர்த்தி செய்து விட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.
அதனைத்தொடர்ந்து பள்ளிக்கு ஒழுங்காக வருகை புரியாத மாணவனிடம், ஒழுங்காக பள்ளிக்கு வருகை புரிய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. கற்றல் திறனில் பின்தங்கியுள்ள மாணவ மாணவியர்களுக்கு சிறந்த முறையில் அவர்களுக்கு புரியும் வண்ணம்மாக கற்பிக்க வேண்டுமென ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும் அரசுபள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு உயர்கல்வி தொடரும்போதே புதுமைப்பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000, 6ம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் சிறந்த கல்லூரிகளில் உயர் கல்வியை தொடர வாய்ப்புள்ளது. 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு அனைத்து கல்வி கட்டணங்களில் இருந்தும் விலக்கு அளிக்கப்படுகிறது.
அதனடிபடையில் நமது மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பயின்ற சுமார் 400 மாணவர்கள் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் உயர்கல்வியில் சேர்ந்துள்ளார்கள். எனவே இத்தகைய வாய்ப்புகளை முழுமையாக மாணவர்கள் தெரிந்துகொண்டு, நீங்கள் நன்றாக பயின்று, பள்ளிப்படிப்பை முடித்து உயர்கல்வி பயின்று வாழ்வில் முன்னேற்றம் பெறவேண்டுமென ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தெரிவித்தார். முன்னதாக கருங்கல் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடினார். ஆய்வில் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மாணவ மாணவியர்கள், உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தண்டவாள பராமரிப்பு பணி: தென்மாவட்ட ரயில் போக்குவரத்தில் மாற்றம்
சனி 23, ஆகஸ்ட் 2025 8:30:27 AM (IST)

குமரி மாவட்டத்தில் ரூ.8.03 கோடி மதிப்பில் புதிய பாலம், கட்டிடங்கள்: முதல்வர் திறந்து வைத்தார்!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 5:19:32 PM (IST)

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு : மீனவர்கள் வேலை நிறுத்தம் - ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 12:49:08 PM (IST)

இளைஞர்களுக்கு ஃபோர்க்லிஃப்ட் ஆப்பரேட்டர் பயிற்சி : ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 12:03:47 PM (IST)

நாகர்கோவிலில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 11:36:02 AM (IST)

பொதுவுடைமை வீரர் ப.ஜீவானந்தம் பிறந்த நாள் விழா : ஆட்சியர், மேயர் அரசியல் கட்சியினர் மரியாதை!
வியாழன் 21, ஆகஸ்ட் 2025 3:13:54 PM (IST)
