» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவட்டத்தில் 21ஆம் தேதி உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

செவ்வாய் 19, ஆகஸ்ட் 2025 5:02:47 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் வருகிற 21ஆம் தேதி உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கபட்டுள்ளது.

இதுகுறித்து ஆட்சியர் அழகுமீனா வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ் 341 முகாம்கள் நடத்திட உத்தேசிக்கப்பட்டு 15.07.2025 முதல் 19.08.2025 வரை 120 முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதே போல் 21.08.2025 அன்று 6 முகாம்கள் கீழ்க்கண்டவாறு நடைபெற உள்ளது.

வட்டம் மற்றும் முகாம் நடைபெறும் இடங்கள்

அகஸ்தீஸ்வரம்: நாகர்கோவில் மாநகராட்சி வார்டு 14 & 15 - SKM மஹால், அண்ணா விளையாட்டு அரங்கம் எதிர்புறம், நாகர்கோவில்.

விளவங்கோடு: இடைகோடு பேரூராட்சி - ஹோலி டிரினிட்டி இன்டர்நேசனல் பள்ளி, மேம்பாலை.

திருவட்டார்: குலசேகரம் பேரூராட்சி - எஸ்.ஆர்.கே.பி.வி மெட்ரிகுலேசன் மேல்நிலை பள்ளி, குலசேகரம்.

விளவங்கோடு: மேல்புறம் – புலியூர்சாலை - புனித மிக்கெல் அதிதூதர் திருமண மண்டபம், தேவிகோடு

கிள்ளியூர்: கிள்ளியூர் – முள்ளாங்கினாவிளை - புனித அந்தோணியார் கலையரங்கம், முள்ளங்கினாவிளை

கல்குளம்: தக்கலை – நுள்ளிவிளை - தூய அன்னை கார்மல் சமுக நலக்கூடம்,
நுள்ளிவிளை.

மேலும் இந்த முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறத் தகுதியுள்ள விடுபட்ட மகளிர் எவரேனும் இருப்பின் முகாம் நடைபெறும் நாளன்று முகாமிற்குச் சென்று தங்கள் விண்ணப்பத்தினை அளிக்கலாம். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கானவிண்ணப்பம் "உங்களுடன் ஸ்டாலின்" முகாம்களில் மட்டுமே வழங்கப்படும். எனவே, "உங்களுடன் ஸ்டாலின்"திட்டத்தின் கீழ் 21.08.2025 அன்று தங்கள் பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory