» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் அரசு பள்ளி மாணவனுக்கு உயர்கல்வி!
செவ்வாய் 19, ஆகஸ்ட் 2025 11:33:01 AM (IST)

இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் (IIIT) உயர்கல்வி பயில உள்ள அம்மாண்டிவிளை அரசுப்பள்ளி மாணவனுக்கு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா வாழ்த்து தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக குறள் கூட்டரங்கில் அம்மாண்டிவிளை அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று, நான்முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று, இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் (IIIT) உயர்கல்வி பயில உள்ள மாணவன் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இ.ஆ.ப, அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவிக்கையில்- கன்னியாகுமரி மாவட்டம் அம்மாண்டிவிளை அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று, தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று, தேசிய அளவிலான முதன்மை கல்வி நிறுவனமான IIIT போபாலில் படிக்க இடம் கிடைக்க பெற்றுள்ள மாணவன் ஆகாஷ் இன்று நேரில் சந்தித்து வாழ்த்துபெற்றார்.
இம்மாணவன் அரசு பள்ளியில் பயின்று, அரசால் அளிக்கப்பட்ட பயிற்சிகளை மேற்கொண்டதன் விளைவாக JEE தேர்வில் தேர்ச்சி பெற்று, தேசிய அளவிலான முன்னணி நிறுவனமான இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (IIIT) போபாலில் சேர்வதற்கான இடம் கிடைக்க பெற்றுள்ளது.
இது போன்று அரசு பள்ளிகளில் 12ம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களும், தேசிய முன்னணி கல்வி நிறுவனங்களில் சேரும் வாய்ப்பை பெற்றுக்கொள்ள, தங்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகளை முறையாக பெற்று, பயனடைந்திட வேண்டும். தேசிய முதன்மை கல்வி நிறுவனங்களில் பயில தெரிவு செய்யப்படும் மாணவர்களுக்கு இந்த கல்வியாண்டிலும் தமிழ்நாடு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உரிய வழிகாட்டுதல் வழங்கப்பட இருப்பதால், 12 ஆம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களும் இத்தகைய வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று தெரிவித்தார்.
முன்னதாக மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, அம்மாண்டிவிளை பள்ளி மாணவன் ஆகாஷ்க்கு பயன்படும் வகையிலும், உயர்கல்வியை ஊக்கப்படுத்தும் விதமாக மடிக்கணினி பரிசாக வழங்கி, வாழ்த்தினார். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர், பள்ளியின் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர், மாவட்ட உயர் கல்வி ஒருங்கிணைப்பாளர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பள்ளிக் கல்வி) கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தண்டவாள பராமரிப்பு பணி: தென்மாவட்ட ரயில் போக்குவரத்தில் மாற்றம்
சனி 23, ஆகஸ்ட் 2025 8:30:27 AM (IST)

குமரி மாவட்டத்தில் ரூ.8.03 கோடி மதிப்பில் புதிய பாலம், கட்டிடங்கள்: முதல்வர் திறந்து வைத்தார்!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 5:19:32 PM (IST)

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு : மீனவர்கள் வேலை நிறுத்தம் - ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 12:49:08 PM (IST)

இளைஞர்களுக்கு ஃபோர்க்லிஃப்ட் ஆப்பரேட்டர் பயிற்சி : ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 12:03:47 PM (IST)

நாகர்கோவிலில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 11:36:02 AM (IST)

பொதுவுடைமை வீரர் ப.ஜீவானந்தம் பிறந்த நாள் விழா : ஆட்சியர், மேயர் அரசியல் கட்சியினர் மரியாதை!
வியாழன் 21, ஆகஸ்ட் 2025 3:13:54 PM (IST)
