» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
வீட்டு மாடியில் கஞ்சா செடி வளர்த்த வாலிபர் கைது!
வியாழன் 14, ஆகஸ்ட் 2025 8:28:12 AM (IST)
மார்த்தாண்டம் அருகே வீட்டு மாடியில் கஞ்சா செடி வளர்த்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
 குமரி மாவட்டம், மார்த்தாண்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இந்துசூடன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் மாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் நின்றிருந்த ஒரு வாலிபர் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்தனர். பிறகு சோதனையிட்டதில் அவரிடம் 50 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
 இதனை தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவர் மார்த்தாண்டம் அருகே செட்டிச்சார்விளையை சேர்ந்த ரவீந்திரன் மகன் சுபாஷ் கிருஷ்ணன் (27) என்பதும், பெயிண்டராக வேலை செய்து வருவதும் தெரிய வந்தது. மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிந்து அவரை போலீசார் கைது செய்தனர்.
 பின்னர் சுபாஷ் கிருஷ்ணன் வீட்டிலும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு மாடியில் அவர் ஏராளமான செடிகளை வளர்த்து வந்துள்ளார். அதில் ஒரு பூந்தொட்டியில் கஞ்சா செடி வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து கஞ்சா செடியை பறிமுதல் செய்தனர். 
 மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

லஞ்சம் வாங்கிய ஆய்வாளர் கைது எதிரொலி: அதிரடி நடவடிக்கையில் இறங்கிய குமரி எஸ்பி!
சனி 25, அக்டோபர் 2025 8:50:44 PM (IST)

குமரி மாவட்டத்தில் பருவமழையினை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் : ஆட்சியர் அறிப்பு
சனி 25, அக்டோபர் 2025 5:16:41 PM (IST)

கன்னியாகுமாரியில் ரூ.1.15 லட்சம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர் கைது!
சனி 25, அக்டோபர் 2025 11:55:11 AM (IST)

குடியிருப்பு பகுதியில் நுழைந்த மலைப்பாம்பு மீட்பு
சனி 25, அக்டோபர் 2025 10:59:02 AM (IST)

அரையாண்டு விடுமுறை: தென்மாவட்ட ரயில்களில் டிக்கெட் முன்பதிவு..!
சனி 25, அக்டோபர் 2025 8:42:07 AM (IST)

குமரியில் விடிய, விடிய கொட்டித்தீர்த்த கனமழை: அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு
சனி 25, அக்டோபர் 2025 8:34:53 AM (IST)


.gif)