» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குளத்தில் குளிக்க சென்ற பெண்ணிடம் 5½ பவுன் நகை பறிப்பு: மர்ம ஆசாமிகள் கைவரிசை
புதன் 13, ஆகஸ்ட் 2025 8:27:55 AM (IST)
பூதப்பாண்டி அருகே மோட்டார் சைக்கிளில் வந்து குளத்தில் குளிக்கச் சென்ற பெண்ணிடம் 5½ பவுன் நகையை பறித்துச் சென்ற 2 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.
குமரி மாவட்டம், பூதப்பாண்டி அருகே உள்ள திடல் ரெத்தினபுரம் மேலத்தெரு பகுதியை சேர்ந்தவர் மதியழகன், தொழிலாளி. இவருடைய மனைவி மல்லிகா (50). இவர் நேற்று மாலை பக்கத்து வீட்டுப் பெண்ணுடன் அந்த பகுதியிலுள்ள புதுக்குளத்தில் குளிப்பதற்காக சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் மோட்டார் சைக்கிளை சாலையோரம் நிறுத்திவிட்டு மல்லிகாவிடம் ஏதோ விசாரிப்பது போல் அருகில் சென்றனர். அதில் ஒருவர் திடீரென மல்லிகாவின் கழுத்தில் கிடந்த 6 பவுன் நகையை பறித்தார்.
உடனே சுதாரித்துக் கொண்ட மல்லிகா நகையின் ஒரு பகுதியை பிடித்துக் கொண்டு பக்கத்து வீட்டு பெண்ணுடன் சேர்ந்து திருடன்... திருடன் என சத்தம் போட்டபடி போராடினார். இந்த போராட்டத்தில் நகை அறுந்து ½ பவுன் மல்லிகாவிடமும், 5½ பவுன் மர்ம நபரிடம் சிக்கியது. கையில் கிடைத்த நகையுடன் அந்த நபர் மோட்டார் சைக்கிளில் தயாராக இருந்த கூட்டாளியுடன் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றார்.
பின்னர், இதுகுறித்து மல்லிகா பூதப்பாண்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு நகைப்பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். குளத்தில் குளிக்கச் சென்ற பெண்ணிடம் 5½ பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

லஞ்சம் வாங்கிய ஆய்வாளர் கைது எதிரொலி: அதிரடி நடவடிக்கையில் இறங்கிய குமரி எஸ்பி!
சனி 25, அக்டோபர் 2025 8:50:44 PM (IST)

குமரி மாவட்டத்தில் பருவமழையினை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் : ஆட்சியர் அறிப்பு
சனி 25, அக்டோபர் 2025 5:16:41 PM (IST)

கன்னியாகுமாரியில் ரூ.1.15 லட்சம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர் கைது!
சனி 25, அக்டோபர் 2025 11:55:11 AM (IST)

குடியிருப்பு பகுதியில் நுழைந்த மலைப்பாம்பு மீட்பு
சனி 25, அக்டோபர் 2025 10:59:02 AM (IST)

அரையாண்டு விடுமுறை: தென்மாவட்ட ரயில்களில் டிக்கெட் முன்பதிவு..!
சனி 25, அக்டோபர் 2025 8:42:07 AM (IST)

குமரியில் விடிய, விடிய கொட்டித்தீர்த்த கனமழை: அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு
சனி 25, அக்டோபர் 2025 8:34:53 AM (IST)


.gif)