» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் அசல் மதிப்பெண் சான்றிதழை பெற அழைப்பு
வியாழன் 7, ஆகஸ்ட் 2025 4:13:14 PM (IST)
பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் அசல் மதிப்பெண் சான்றிதழை அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் அணுகி பெற்றுக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இடைநிலைப் பொதுத்தேர்வு (SSLC) எழுதிய தனித்தேர்வர்களின் கவனத்திற்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
செப்டம்பர் 2021 இடைநிலை துணைத்தேர்வு மற்றும் மே 2022 பொதுத்தேர்வு /ஆகஸ்ட் 2022 இடைநிலை துணைத்தேர்வு வரையிலான அனைத்து பருவங்களுக்குரிய தனித்தேர்வர்களால் கோரப்படாத அசல் மதிப்பெண் சான்றிதழ்களை இந்த செய்திக்குறிப்பு வெளியிடப்படும் நாளில் இருந்து 90 நாட்களுக்குள் தேர்வு எழுதிய நுழைவுச்சீட்டுடன் நாகர்கோவில் முதன்மைக்கல்வி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் அணுகி பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார். தவறினால் மேற்படி தேர்விற்குரிய மதிப்பெண் சான்றிதழ்களை விதிமுறைகளின்படி அழிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தம் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்
திங்கள் 3, நவம்பர் 2025 8:19:38 PM (IST)

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: 3 முறை நேரில் சென்று விசாரிக்க அறிவுறுத்தல்
சனி 1, நவம்பர் 2025 5:36:12 PM (IST)

குமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்த நாள் : மார்ஷல் நேசமணி சிலைக்கு மரியாதை!
சனி 1, நவம்பர் 2025 12:48:19 PM (IST)

ஐயப்ப பக்தர்கள் சீசன் நவ. 17ல் தொடக்கம்: குமரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
சனி 1, நவம்பர் 2025 12:09:30 PM (IST)

பைக் திருட்டில் ஈடுபட்ட 3 இளஞ்சிறார்கள் உட்பட 4 பேர் கைது: 6 வாகனங்கள் மீட்பு
வெள்ளி 31, அக்டோபர் 2025 5:34:24 PM (IST)

பேச்சுப்பாறையில் அணையில் உபரிநீர் திறப்பு : திற்பரப்பு அருவில் வெள்ளப்பெருக்கு!
வெள்ளி 31, அக்டோபர் 2025 4:47:38 PM (IST)


.gif)