» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கிள்ளியூர் வட்டத்தில் ரூ.27 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள் : ஆட்சியர் ஆய்வு
புதன் 6, ஆகஸ்ட் 2025 12:22:30 PM (IST)

கிள்ளியூர் வட்டத்துக்குட்பட்ட பகுதியில் ரூ.27 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி மாவட்ட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கிள்ளியூர் வட்டத்துக்குட்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்- தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்ற பின்பு தமிழ்நாட்டிற்குட்பட்ட அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் பல்வேறு திட்டங்களின் வாயிலாக பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை அறிவித்து அதற்கான நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டு, சிறப்பாக அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார்கள்.
அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 79 கடலோர குடியிருப்புகள், 17 பேரூராட்சிகள் மற்றும் 19 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டத்தில் சடையங்குழி முதல் திக்கணங்கோடு வரை 10 கிலோமீட்டர் நீளத்தில் குடிநீர் குழாய்கள் மாற்றியமைக்கும் பணியானது, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் "உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின்” கீழ் ரூ.26.68 கோடி ஒப்புதல் அளிக்கப்பட்டு, 16.05.2025 அன்று பால்வளத்துறை அமைச்சர் பணிகளை துவக்கி வைத்தார்கள். இப்பணிகள் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் நடைபெற்று வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் PSC குழாய்களை மாற்றி 600 மி.மீ. மற்றும் 500 மி.மீ விட்டமுள்ள இரும்பு குழாய்கள் அமைக்கும் பணிகள் கருமாவிளை மற்றும் மாங்கரை பகுதியில் நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதோடு, பணிகளை மழைக்காலத்திற்கு, முன்பாக முடிக்குமாறு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
தொடர்ந்து தேசிய தொழுநோய் ஒழிப்புத்திட்டத்தின் சார்பில் நமது மாவட்டத்தில் தொழுநோய் கண்டுப்பிடிக்கும் பணி 01.08.2025 முதல் இரண்டு வாரங்கள் நடைபெறுகிறது. அதனடிப்படையில் இன்று இராஜாக்கமங்கலம் ஒன்றியம் கணபதிபுரம் பேரூராட்சிக்குட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், அளத்தங்கரை, முருங்கவிளை கிராம பகுதியில் சுகாதார பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் தொழுநோய் கண்டுபிடிப்பு பணியை மேற்கொண்டு வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தெரிவித்தார்.
ஆய்வில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் T.C.ராஜன், துணை இயக்குநர் (தொழுநோய்) கிரிஜா, உதவி நிர்வாக பொறியாளர் ஆல்வின்சி, உதவி பொறியாளர் ஷிபின், மருத்துவ அலுவலர் இந்திரா பிரியதர்ஷினி, நலக்கல்வியாளர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர், சுகாதார ஆய்வாளர், கிராம சுகாதார செவிலியர், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தம் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்
திங்கள் 3, நவம்பர் 2025 8:19:38 PM (IST)

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: 3 முறை நேரில் சென்று விசாரிக்க அறிவுறுத்தல்
சனி 1, நவம்பர் 2025 5:36:12 PM (IST)

குமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்த நாள் : மார்ஷல் நேசமணி சிலைக்கு மரியாதை!
சனி 1, நவம்பர் 2025 12:48:19 PM (IST)

ஐயப்ப பக்தர்கள் சீசன் நவ. 17ல் தொடக்கம்: குமரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
சனி 1, நவம்பர் 2025 12:09:30 PM (IST)

பைக் திருட்டில் ஈடுபட்ட 3 இளஞ்சிறார்கள் உட்பட 4 பேர் கைது: 6 வாகனங்கள் மீட்பு
வெள்ளி 31, அக்டோபர் 2025 5:34:24 PM (IST)

பேச்சுப்பாறையில் அணையில் உபரிநீர் திறப்பு : திற்பரப்பு அருவில் வெள்ளப்பெருக்கு!
வெள்ளி 31, அக்டோபர் 2025 4:47:38 PM (IST)


.gif)