» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு இலவச செல்போன் பழுதுபார்த்தல் பயிற்சி
சனி 2, ஆகஸ்ட் 2025 3:32:12 PM (IST)
கன்னியாகுமரி மாவட்டத்தில் கிராமபுறங்களிலுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கத்துடன் இலவச செல்போன் பழுதுபார்த்தல் பயிற்சி வழங்கப்பட உள்ளது
கன்னியாகுமரி மாவட்டத்தில் கிராமப்புறங்களிலுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும், 30 நாட்கள் கொண்ட இலவச செல்போன் பழுதுபார்த்தல் பயிற்சி 08.08.2025 அன்று தொடங்க உள்ளது.
பயிற்சியில் கலந்து கொள்ள பதிவு செய்ய வேண்டிய கடைசி நாள் 08.08.2025 ஆகும். இப்பயிற்சிகள் அனைத்தும் 100% செய்முறை பயிற்சிகளாக இருக்கும். இப்பயிற்சி நடைபெறும் போது சீருடை, அடையாள அட்டை, தேநீர், காலை உணவு, மதிய உணவு மற்றும் பயிற்சிக்கு தேவையான அனைத்து பொருட்களும் இலவசமாக வழங்கப்படும். எனவே இப்பயிற்சியில் 18 வயதிலிருந்து 45 வயது வரை உள்ள கிராமப்புற இளைஞா்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்கள் -9944844019, 6379596738, 9791894159, தொலைபேசி எண். 04652 235462. இப்பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள இளைஞர்கள் நாகர்கோவில், பால்பண்ணை அருகில் இயங்கி வரும் இந்தியன் ஒவர்சீஸ் வங்கி கிராம சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தை அணுகலாம் என்று குமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தம் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்
திங்கள் 3, நவம்பர் 2025 8:19:38 PM (IST)

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: 3 முறை நேரில் சென்று விசாரிக்க அறிவுறுத்தல்
சனி 1, நவம்பர் 2025 5:36:12 PM (IST)

குமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்த நாள் : மார்ஷல் நேசமணி சிலைக்கு மரியாதை!
சனி 1, நவம்பர் 2025 12:48:19 PM (IST)

ஐயப்ப பக்தர்கள் சீசன் நவ. 17ல் தொடக்கம்: குமரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
சனி 1, நவம்பர் 2025 12:09:30 PM (IST)

பைக் திருட்டில் ஈடுபட்ட 3 இளஞ்சிறார்கள் உட்பட 4 பேர் கைது: 6 வாகனங்கள் மீட்பு
வெள்ளி 31, அக்டோபர் 2025 5:34:24 PM (IST)

பேச்சுப்பாறையில் அணையில் உபரிநீர் திறப்பு : திற்பரப்பு அருவில் வெள்ளப்பெருக்கு!
வெள்ளி 31, அக்டோபர் 2025 4:47:38 PM (IST)


.gif)