» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நாகர்கோவிலில் ஆசிரியர்கள் சாலை மறியல்: பெண்கள் உட்பட100க்கும் மேற்பட்டோர் கைது

வெள்ளி 18, ஜூலை 2025 4:04:20 PM (IST)



நாகர்கோவிலில் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. 

தமிழ்நாடு அரசு ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. 

மறியல் போராட்டத்திற்கு டிட்டோ ஜாக் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செந்தில்குமார், சுரேஷ்குமார், சுமஹாசன் தலைமை வகித்தனர். போராட்டத்தினை டிட்டோ ஜாக் மாநில உயர் மட்ட குழு உறுப்பினர் தியாகராஜன் தொடங்கி வைத்தார். மறியலில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கைது தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory