» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிய பேருந்து சேவை : அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்
ஞாயிறு 6, ஜூலை 2025 10:46:20 AM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு புதிய பேருந்து சேவையினை பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) நாகர்கோவில் மண்டலத்தின்கீழ் புதிய பேருந்து சேவைகளை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தலைமையில் வடசேரி பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் கலந்து கொண்டு, புதிய பேருந்து சேவையினை கொடியசைத்து துவக்கி வைத்து தெரிவிக்கையில் "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் கடைகோடி மக்களுக்கும் அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். குறிப்பாக ஏழை எளிய மக்களின் அன்றாட தேவையான பேருந்து வசதிகள் தேவைக்கு ஏற்ப ஏற்படுத்தி கொடுத்து வருகிறார்கள்.
கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்த வரை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திலி) லிட்., நாகர்கோவில் மண்டலத்தில் தற்போது 441 நகர் தட பேருந்துகளும், 298 புறநகர் தட பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றது. இப்பேருந்துகள் இம்மாவட்டத்தில் அமைந்துள்ள இராணித்தோட்டம், கன்னியாகுமரி, விவேகானந்தபுரம், குழித்துறை, திருவட்டார், திங்கள்நகர், மார்த்தாண்டம், குளச்சல் பகுதிகளில் உள்ள 12 கிளைகளிலிருந்து இயக்கப்படுகின்றன.
இவற்றில் 371 நகர் தட பேருந்துகள் மகளிர் கட்டணமில்லா வகையில் இயக்கப்படுகின்றன. இப்பேருந்துகளில் தினம் சராசரியாக 3,54,000 மகளிர் பயணிகள் பயன்பெற்று வருகின்றனர். மேலும் திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண 371 நகர் தட பேருந்துகளிலும் கட்டணமின்றி பயணம் செய்கின்றனர்.
மேற்கண்ட பேருந்துகள் மூலம் தினம் நகர் தடங்களில் 1,41,649 கிலோ மீட்டரும், புறநகர் தடங்களில் 1,55,002 கிலோ மீட்டரும் என மொத்தம் 2,96,651 பேருந்து இயக்கம் நடைபெற்று வருகிறது. தினம் 9,31,604 இலட்சம் பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். இம்மாவட்ட பேருந்துகள் மூலம் சுமார் 1.25 இலட்சம் மாணவ மாணவியர்கள் கட்டணமின்றி பயணம் செய்கின்றனர். 2,716 மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணமின்றி பயணம் மேற்கொள்ள பயண அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
18 சுதந்திர போராட்ட மற்றும் எல்லை போராட்ட தியாகிகளுக்கு கட்டணமில்லா பயண அட்டை வழங்கப்பட்டுள்ளன. 437 கண்பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணமில்லா பயண அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. 47 மொழிப்போர் தியாகிகள் மற்றும் தமிழ் செம்மல் பயனாளிகளுக்கு கட்டணமில்லா பயண அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நாள் வரையிலும் இம்மண்டலத்தில் 97 பேருந்துகள் கூண்டு புனரமைக்கப்பட்டு வழித்தடங்களில் இயங்கி வருகின்றன. 2023 முதல் நடப்பு வருடம் வரை (Town -118), (Mofussil-93) 211 புதிய பேருந்துகள் இம்மண்டலத்தில் இயக்கப்பட்டு பழைய பேருந்துகள் கழிவு செய்யப்பட்டுள்ளன.
அதனைத்தொடர்ந்து இன்று 38A நாகர்கோவில் - புத்தன்துறை, 15L நாகர்கோவில் -யாக்கோபுரம், 15V நாகர்கோவில் - வடக்கன்குளம், 4BV நாகர்கோவில் -காற்றாடிவிளை, 38P நாகர்கோவில் - பிலாவிளை, 14E/V நாகர்கோவில் - முட்டம், 4H நாகர்கோவில் - திடல், 33C நாகர்கோவில் - கண்ணன்பதி, 4N நாகர்கோவில் - சுருளகோடுக்கும், 5/A நாகர்கோவில் - குளச்சல், 5D-PHS நாகர்கோவில் - வாணியக்குடி, 9G குளச்சல் - மேல்மிடாலம், 3 நாகர்கோவில் - கண்ணன்குளம், 33/D தேரூர் - தாழக்குடி, 38H நாகர்கோவில் – புத்தன்துறை,
2C வடசேரி – அஞ்சுகிராம், 83A மார்த்தாண்டம் – இரைமன்துறை, 87A/B மார்த்தாண்டம் – இனையம், 86C/A மார்த்தாண்டம் – பனச்சமூடு, 1B வடசேரி – அகஸ்தீஸ்வரம், 16B மார்த்தாண்டம் – நெட்டா, 86/C மார்த்தாண்டம் – கட்டுவா, 1D/A நாகர்கோவில் – கன்னியாகுமரி, 89VC/A மற்றும் 89C/C மார்த்தாண்டம் – அருமனை என புதிய 25 வழித்தட பேருந்துகள் இயக்கம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் தெரிவித்தார்கள்.
ண்ண
நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தலைவர் என்.சுரேஷ் ராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெ.ஜி.பிரின்ஸ் (குளச்சல்), முனைவர் தாரகை கத்பர்ட் (விளவங்கோடு), நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா, போக்குவரத்து கழக துணை மேலாளர் ஜெரோலின், மண்டல தலைவர்கள் ஜவஹர், அகஸ்தீனா கோகிலவாணி, மாமன்ற உறுப்பினர் கலாராணி, அகஸ்தீசன், பூதலிங்கம் பிள்ளை, சரவணன், தொழில் சங்க தலைவர் சிவன் பிள்ளை, அருண்காந்த், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிரசவித்த பின் குழந்தைகளின் செவித்திறன்களை நன்கு ஆராய வேண்டும்: ஆட்சியர் வேண்டுகோள்
சனி 5, ஜூலை 2025 12:41:12 PM (IST)

திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் மர்ம மரணம் : தாய் புகார் - போலீஸ் விசாரணை!!
சனி 5, ஜூலை 2025 10:48:06 AM (IST)

இரணியல் அரண்மனை பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது : ஆட்சியர் அழகுமீனா தகவல்
வெள்ளி 4, ஜூலை 2025 5:36:19 PM (IST)

கிஷ் தீவில் சிக்கி தவிக்கும் குமரி மீனவர்களை மீட்க வேண்டும்: விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை
வெள்ளி 4, ஜூலை 2025 10:40:08 AM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வியாழன் 3, ஜூலை 2025 10:16:50 AM (IST)

கால்நடைகளுக்கு கால்நோய், வாய்நோய் தடுப்பூசி பணி : ஆட்சியர் துவக்கி வைத்தார்!
புதன் 2, ஜூலை 2025 3:41:45 PM (IST)
