» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நாகர்கோவில் ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வெள்ளி 27, ஜூன் 2025 4:58:02 PM (IST)

நாகர்கோவில் ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல துறையின் கீழ் செயல்படும் நாகர்கோவில் அரசு கல்லூரி மாணவர் விடுதியினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்-கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் 1 பள்ளி மாணவர் விடுதி, 1 பள்ளி மாணவியர் விடுதி, 3 கல்லூரி மாணவர் விடுதிகள், 4 கல்லூரி மாணவியர் விடுதிகள், 1 தொழிற்பயிற்சி மாணவர் விடுதி என மொத்தம் 10 விடுதிகள் இயங்கி வருகிறது.
அதனடிப்படையில் நாகர்கோவில் அரசு கல்லூரி மாணவர் விடுதியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. விடுதியின் சமையறையினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதோடு, விடுதியினை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திடவும், மாணவர்களுக்கு உணவுப்பட்டியலின்படி தரமான உணவு வழங்கவும் விடுதி காப்பாளர் மற்றும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
தொடர்ந்து மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும், விடுதியில் உள்ள அடிப்படை வசதிகள் மற்றும் கல்விசார்ந்த குறைகள் குறித்தும் மாணவர்களிடம் கேட்டறியப்பட்டது. மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் செயல்படுத்தப்பட்டு வரும் தமிழ்புதல்வன் திட்டத்தின் கீழ் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. விடுதியில் தமிழ்புதல்வன் திட்டத்தின் கீழ் பயனடையும் மாணவர்களிடம் திட்டத்தின் பயன்கள் குறித்து கேட்டறியப்பட்டது. அப்போது மாணவர்கள் அந்த பணம் எனக்கு கல்வி கட்டணம், தேர்வு கட்டணம் செலுத்தவும், புத்தகங்கள் வாங்கவும், இணைய கட்டணம், கணினி பயிற்சி கட்டணம் செலுத்தவும் உள்ளிட்டவைகளுக்கு பயன்படுகிறது.
மேலும் விடுதியில் தங்கி 3ம் ஆண்டு பயிலும் மாணவர்கள், தொழில்நுட்ப கல்வி பயிலும் மாணவர்களிடம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் சனிக்கிழமை (28.06.2025) அன்று நடைபெறும் தனியார் வேலைவாய்ப்பு முகாமிற்கு வருகை தருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. விடுதியில் இருக்கும் நேரத்தில் போட்டித்தேர்வுக்களுக்கு தங்களை தயார்படுத்துமாறு மாணவர்களிடம் அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அதிக அளவு பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதோடு, வேலைவாய்ப்புக்களும் உள்ளது. எனவே நீங்கள் அனைவரும் உங்கள் எதிர்கால லட்சிய கனவுகள் மெய்பட மாணவர்களிடம் படிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வாழ்வில் முன்னேற்றம் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.77.27 கோடி கடனுதவி: ஆட்சியர் வழங்கினார்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:17:29 PM (IST)

ஆயுத பூஜை, தீபாவளி: சென்னை - நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்!!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 3:56:34 PM (IST)

கன்னியாகுமரியில் 18ஆம் தேதி கல்விக் கடன் மேளா: ஆட்சியர் தகவல்
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 3:48:43 PM (IST)

திங்கள்சந்தை- புதுக்கடை சாலையில் பாலம் பணி: 10 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் ரத்து!
திங்கள் 15, செப்டம்பர் 2025 5:00:08 PM (IST)

கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை கொன்று குளத்தில் வீசிய கொடூரம்: இளம்பெண் கைது!
திங்கள் 15, செப்டம்பர் 2025 12:53:57 PM (IST)

தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்: கனிமொழி தலைமையில் உறுதிமொழி ஏற்பு
திங்கள் 15, செப்டம்பர் 2025 12:48:00 PM (IST)
