» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பத்மநாபபுரம் அரசு மருத்துவமனையில் ஆட்சியர் ஆர்.அழகுமீனா திடீர் ஆய்வு
செவ்வாய் 24, ஜூன் 2025 5:28:10 PM (IST)

பத்மநாபபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில் "மருத்துவமனையில் பிரசவ முன்கவனிப்பு பகுதியில் நாற்காலிகள் குறைவாக இருப்பதைக் கவனித்து, நோயாளிகள் வசதியாக அமர தேவையான நாற்காலிகள் வாங்க வேண்டும் என்றும்,
பிரசவத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய தாய்மார்கள் பரிசோதனை படுக்கை பிரசவ முன்கவனிப்பு பகுதியில் இருக்க வேண்டும் எனவும், மகப்பேறு பிரிவும், பிரசவ அறையும் உள்ளடங்கியதாக இருக்க வேண்டும், தாய்மார்களுக்கு பிரசவத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய காலங்களில் போதுமான அளவு ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும் எனவும், கர்ப்பிணி மற்றும் குழந்தைளுக்கு ஆய்வகத்தில் தனி கவுண்டர்கள் அமைக்கப்பட வேண்டும் எனவும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
தொடர்ந்து ஆய்வகத்தில் காத்திருக்கும் பகுதியில் நோயாளிகள் அமர்வதற்கு ஏதுவாக நாற்காலிகள் போடப்பட்டு அவை வரிசையாக அமைக்க வேண்டுமெனவும், சுகாதார கல்வி மற்றும் ஆலோசனைக்காக LED பேனல்கள் வைக்கப்பட வேண்டும் எனவும், DRP PG மருத்துவர்கள் இரவு பணியில் பணியமர்த்தப்பட வேண்டும் எனவும், முடநீக்கியல் புறநோயாளிகள் பிரிவில் கட்டு போடும் பகுதி மற்றும் சிறிய அறுவை சிகிட்சை பகுதிகளுக்கு இடையே திரை வைக்கப்பட வேண்டுமெனவும்,
இரத்த சர்க்கரை மட்டும் பரிசோதனை செய்யும் நோயாளிகளுக்கு புறநோயாளிகள் பிரிவிலேயே One Touch முறையில் பரிசோதனை செய்யவும், மகப்பேறுக்கு முந்தைய மற்றும் மகப்பேறுக்கு பிந்தைய பகுதிகளில் தனித்தனி திரைச்சீலைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்று தெரிவித்தார்.
ஆய்வில் இணை இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் ஸ்டீபன்ராஜ், மருத்துவமனை கண்காணிப்பாளர், மகளிர் மற்றும் மகப்பேறு தலைமை மருத்துவர், இரத்த வங்கி மருத்துவ அலுவலர், செவிலியர் கண்காணிப்பாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், இதர மருத்துவமனை பணியாளர்கள் துறை அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.77.27 கோடி கடனுதவி: ஆட்சியர் வழங்கினார்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:17:29 PM (IST)

ஆயுத பூஜை, தீபாவளி: சென்னை - நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்!!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 3:56:34 PM (IST)

கன்னியாகுமரியில் 18ஆம் தேதி கல்விக் கடன் மேளா: ஆட்சியர் தகவல்
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 3:48:43 PM (IST)

திங்கள்சந்தை- புதுக்கடை சாலையில் பாலம் பணி: 10 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் ரத்து!
திங்கள் 15, செப்டம்பர் 2025 5:00:08 PM (IST)

கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை கொன்று குளத்தில் வீசிய கொடூரம்: இளம்பெண் கைது!
திங்கள் 15, செப்டம்பர் 2025 12:53:57 PM (IST)

தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்: கனிமொழி தலைமையில் உறுதிமொழி ஏற்பு
திங்கள் 15, செப்டம்பர் 2025 12:48:00 PM (IST)
