» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பேச்சிப்பாறை அணை நிரம்பி உபரிநீா் வெளியேற்றம் : திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு
புதன் 18, ஜூன் 2025 11:32:12 AM (IST)
பேச்சிப்பாறை அணை நிரம்பி உபரிநீா் வெளியேற்றப்பட்டதால் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து, அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடா்ந்து பெய்துவரும் நிலையில், 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் நேற்று காலை 6 மணிக்கு 45.52 அடியாக அதிகரித்தது. வெள்ள அபாயத்தை தடுக்கும் வகையில் அணையின் மறுகால் மதகுகள் காலை 6 மணிக்கு திறக்கப்பட்டு விநாடிக்கு 526 கன அடி தண்ணீா் வெளியேற்றப்பட்டது.
அப்போது அணைக்கு விநாடிக்கு 1233 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையின் பாசனக் கால்வாயில் விநாடிக்கு 503 கன அடி தண்ணீா் திறந்து விடப்பட்டது. பேச்சிப்பாறை அணையிலிருந்து திறக்கப்பட்ட உபரிநீா் கோதையாற்றில் கலந்து திற்பரப்பு அருவி வழியாகப் பாய்கிறது. திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து, அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.
மாவட்டத்தின் அணைப் பகுதிகள் மற்றும் மலையோரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்துவந்த நிலையில், நேற்று சற்று தணிந்தது. பகலில் அவ்வப்போது லேசான சாரல் மழை மட்டுமே பெய்தது. இதனால் மாலையில் அணையின் நீா்வரத்து
விநாடிக்கு 800 கன அடியாகக் குறைந்தது. மறுகால் மதகுகள் வழியாக வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு விநாடிக்கு 400 கன அடியாக குறைக்கப்பட்டது. பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் நேற்று காலை நிலவரப்படி, 65.45 அடியாக உயா்ந்தது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 77 அடியாகும்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.77.27 கோடி கடனுதவி: ஆட்சியர் வழங்கினார்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:17:29 PM (IST)

ஆயுத பூஜை, தீபாவளி: சென்னை - நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்!!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 3:56:34 PM (IST)

கன்னியாகுமரியில் 18ஆம் தேதி கல்விக் கடன் மேளா: ஆட்சியர் தகவல்
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 3:48:43 PM (IST)

திங்கள்சந்தை- புதுக்கடை சாலையில் பாலம் பணி: 10 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் ரத்து!
திங்கள் 15, செப்டம்பர் 2025 5:00:08 PM (IST)

கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை கொன்று குளத்தில் வீசிய கொடூரம்: இளம்பெண் கைது!
திங்கள் 15, செப்டம்பர் 2025 12:53:57 PM (IST)

தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்: கனிமொழி தலைமையில் உறுதிமொழி ஏற்பு
திங்கள் 15, செப்டம்பர் 2025 12:48:00 PM (IST)
