» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
அனந்தனாறு கால்வாயில் ரூ.1.10 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகள்: ஆட்சியர் ஆய்வு
திங்கள் 16, ஜூன் 2025 5:24:15 PM (IST)

அனந்தனாறு கால்வாயில் ரூ.1.10 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி மாவட்ட நீர்வள ஆதாராத்துறை சார்பில் தோவாளை வட்டத்துக்குட்பட்ட செண்பகராமன்புதூர் ஊராட்சிக்குட்பட்ட தோவாளை கால்வாய், உள்ளிமலை கால்வாய், சுருளகோடு ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வளர்ச்சிதிட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்:- முதலமைச்சர் கன்னியாகுமரி மாவட்டத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டப்பணிகளுக்கு நிதிஒதுக்கீடு செய்து, வளர்ச்சி திட்டப்பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்கள்.
அதனடிப்படையில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை கால்வாய் மூலம் பாசனம் பெறும் செண்பகராமன்புதூர் சுற்றியுள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தோவாளை கால்வாய் மற்றும் அதன் கிளை கால்வாய்கள் வழியாக தண்ணீர் கடைமடை வரை செல்வதை பார்வையிட்டு, விவசாயிகளிடம் கலந்துரையாடப்பட்டது. மேலும் கால்வாயில் தங்கு தடையின்றி தண்ணீர் செல்வதற்கு ஏற்படும் இடையூறுகளை களைவதுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஒவ்வொரு வயலுக்கும் தண்ணீர் செல்வதை உறுதி செய்யும்படி வேளாண்மை துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
தொடர்ந்து நிரந்த வெள்ள தடுப்பு திட்டத்தின் கீழ் ரூ.1.10 கோடி மதிப்பில் அனந்தனாறு கால்வாயில் உள்ளிமலை பகுதியில் ஏற்பட்ட உடைப்பினை நிரந்தரமாக சீரமைக்கும் பணிகள் நேரில் பார்வையிடப்பட்டது. ஆனந்தனாறு கால்வாய் மூலம் பாசனம் பெறும் பகுதிகள் நீரின்றி கருகாதவாறு விரைவில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள நீர்வள ஆதாரத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இப்பணிகளை விரைந்து முடித்து விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டுவருமாறு ஒப்பந்தாரர்கள் மற்றும் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து சுருளகோடு ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பணியாளர்களிடம் கலந்துரையாடப்பட்டது என்று தெரிவித்தார்.
ஆய்வில் வேளாண்மை இணை இயக்குனர் முருகேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் விவசாயம் ஜென்கின் பிரபாகர், வேளாண்மை துணை இயக்குனர், வேளாண்மை உதவி இயக்குனர், முன்னோடி விவசாயிகள், நீரினை பயன்படுத்துவர் சங்க நிர்வாகிகள், துறை அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.77.27 கோடி கடனுதவி: ஆட்சியர் வழங்கினார்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:17:29 PM (IST)

ஆயுத பூஜை, தீபாவளி: சென்னை - நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்!!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 3:56:34 PM (IST)

கன்னியாகுமரியில் 18ஆம் தேதி கல்விக் கடன் மேளா: ஆட்சியர் தகவல்
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 3:48:43 PM (IST)

திங்கள்சந்தை- புதுக்கடை சாலையில் பாலம் பணி: 10 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் ரத்து!
திங்கள் 15, செப்டம்பர் 2025 5:00:08 PM (IST)

கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை கொன்று குளத்தில் வீசிய கொடூரம்: இளம்பெண் கைது!
திங்கள் 15, செப்டம்பர் 2025 12:53:57 PM (IST)

தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்: கனிமொழி தலைமையில் உறுதிமொழி ஏற்பு
திங்கள் 15, செப்டம்பர் 2025 12:48:00 PM (IST)
